வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்

முன்னாள் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா அம்மான்) விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தின்போது உத்தியோகபூர்வ பாவனைக்காக ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்த குண்டுத்துளைக்காத வாகனமொன்றை தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன்பின்னர் நீண்டகாலம் விசாரணைக்கு உட்பட்டுவந்த வழக்கில் இருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்ந

இந்­நி­­லை­யில்,  இன்றைய தினம் மீள அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, வழக்கு இடம்பெற்ற காலப்பகுதியில் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை நீக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

(Visited 20 times, 1 visits today)

Post Author: metro