வைர­லான ஸ்ரே­யாவின் கவர்ச்­சிப்­ப­டம்

35 வயதாகும் நடிகை ஸ்ரேயா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி ஆகிய படங்­களில் நடித்து பிர­ப­ல­மான நடிகை ஸ்ரேயா, அரை நிர்­வாண புகைப்­ப­டத்தை வெளி­யிட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தியிருக்­கிறார். ‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமி­ழுக்கு அறி­மு­க­மா­னவர் நடிகை ஸ்ரேயா.

ஜெயம் ரவி­யுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிர­பலமானார். ‘சிவாஜி’ படத்தில் ரஜி­னியின் ஜோடி­யாகி முன்­னணி நடி­கை­யாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்­ர­முடன் நடித்தார். தெலுங்கில், தொடர்ந்து நடித்து வந்தார்.

தற்­போது, தமிழில் ‘நர­கா­சுரன்’ படத்தில் நடித்­துள்ளார். இப்­படம் விரைவில் வெளி­யாகவுள்­ளது. சமீ­பத்தில் ஸ்ரேயா இந்­தோ­னே­ஷியா சென்­றுள்ளார். அங்­குள்ள பன்டா கடல் பகு­தியில் கட­லுக்குள் ‘டூபீஸ்’ நீச்சல் உடையில் கடல் கன்னி போல் நீந்­தி­யதை புகைப்­ப­ட­மாக எடுத்து இணையத் தளத்தில் வெளி­யிட்டிருந்தார்.

இந்த புகைப்­படம் வைர­லா­னது. தற்­போது அரை நிர்­வா­ண­மான புகைப்­ப­டத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார். ஸ்ரேயா­விற்கு பட­வாய்ப்­புகள் அதி­க­மாக இல்லை. என்­றாலும் தான் இள­மை­யாக இருப்­ப­தாக காட்­டிக்­கொள்­வ­தற்­கா­கவே இப்போது இந்த படங்களை ஸ்ரேயா வெளியிட்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

(Visited 65 times, 1 visits today)

Post Author: metro