வங்கியில் 989,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மோசடி; பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி கைது!

(ரெ.கிறிஷ்­ணகாந்)

 

பிர­பல பாடகர் விக்டர் ரத்­னா­யக்­கவின் மனை­வி­யான ஹஷினி ரத்­னா­யக்க நேற்று கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தங்­காலை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.


முறைப்­பாடு தொடர்­பாக வாக்­கு­மூலம் அளிப்­ப­தற்கு நேற்­றுக்­காலை சட்டத் தர­ணி­யொ­ரு­வ­ருடன் தங்­காலை தலைமை பொலிஸ் நிலை­யத்தின் விசேட குற்ற விசா­ரணை பிரி­வுக்கு சென்­றி­ருந்த போதே வாக்­கு­மூலப் பதிவின் பின்னர் அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

தங்­காலை நக­ரி­லுள்ள அரச வங்கி ஒன்றில் ஹஷினி ரத்­னா­யக்க (33) கட­மை­யாற்­றிய போது, 2012. 11. 14 ஆம் திகதி முதல் 2016. 04. 22 ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யினுள் வங்­கியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் 9 இலட்­சத்து 89 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான தங்க ஆப­ர­ணங்கள் தொடர்­பான மோசடி குறித்து அவ்­வங்­கியின் முகா­மை­யா­ளரால் தங்­காலை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய, குறித்த முறைப்­பாடு தொடர்பில் தேடப்­பட்­டு­வந்த சந்­தேக நப­ரான ஹஷினி ரத்­னா­யக்க நேற்றுக் காலை சட்­டத்­த­ர­ணி­யுடன் தங்­காலை பொலிஸ் நிலை­யத்தில் வாக்­கு­மூலம் பதி­வ­தற்­காக சென்­றுள்ளார்.

 

சம்­பவம் குறித்து வாக்­கு­மூலப் பதி­வு­களை மேற்­கொண்­டதன் பின்னர் அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் நேற்­றை­ய­தினம் தங்­காலை பொலிஸாரால் கைது செய்­யப்­பட்ட அவர், தங்­காலை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து, எதிர்­வரும் 17 ஆம் திக­தி­வரை அவரை விளக்­க­ம­றியலில் வைக்­கு­மாறு உத்தரவிடப்பட்டது.

சிங்கள இசைத் துறையில் பிர­பல பாட­க­ரான விக்டர் ரத்­னா­யக்­கவின் முதல் மனைவி சுமார் 13 வரு­டங்­க­ளுக்கு முன்னர் உயி­ரி­ழந்­தி­ருந்த நிலையில், 9 வரு­டங்­க­ளாக தான் காத­லித்­து­வந்த ஹஷி­னியை கடந்த 2017 மார்ச் 1 ஆம் திகதி விக்டர் ரத்னா­யக்க மறு­மணம் செய்­து­கொண்டார்.

தான் பணி­யாற்றி வந்த வங்­கி­யி­லி­ருந்து மேற்­படி மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வ­ரென தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து, ஹஷினி பணி­யி­லி­ருந்து விலக்­கப்­பட்­டி­ருந்த அதே­வேளை, ஹஷினி வெளி­யாட்­க­ளிடம் பெற்­றி­ருந்த பாரிய கடன் தொகையை விக்டர் ரத்­னா­யக்க செலுத்­தி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


இதே­வேளை, கடந்த 2017 பெப்­ர­வரி 18 ஆம் திகதி தனது 75 ஆவது பிறந்த தினத்­தன்று விக்டர் ரத்னா­யக்க தன்­னை­விட 42 வரு­டங்கள் இள­மை­யான, 33 வய­தான ஹஷி­னி­யுடன் திரு­மண நிச்­ச­ய­தார்த்தம் செய்து கொண்ட அதே­வேளை, அதை­ய­டுத்து வந்த மார்ச் 1 ஆம் திகதி அவரைத் திரு­மணம் செய்­து­கொண்டார்.

தங்­க­ளு­டைய பேச்சை கருத்­திற்­கொள்­ளாது, தனது தந்தை மறு­மணம் செய்­துகொண்டமை­யினால் மன­மு­டைந்த அவ­ரது மகன் லெலும் ரத்­னா­யக்க “எனது தந்தை மார்ச் முதலாம் திகதி இறந்­து­விட்டார்” என்­ற­வாறு பேஸ்புக் பதி­வொன்றை மேற்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இது இவ்­வா­றி­ருக்­கையில், திரு­ம­ணத்தின் பின்னர் அத்து­ரு­கி­ரி­ய­வி­லுள்ள விக்டர் ரத்­னா­யக்­கவின் வீட்டில் வசித்­து­வந்த ஹஷி­னி­ரத்­னா­யக்­க­வுக்கு எதி­ராக நகை மோசடி தொடர்பில் பொலிஸ் நிலை­யத்­துக்கு முறைப்­பாடு கிடைத்­த­தை­ய­டுத்து, சுமார் ஒன்­றரை வருட காலத்­துக்கு இந்த மோசடி மூடி­ம­றைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதற்­காக இலட்­சக்­க­ணக்­கான தொகை பல்­வேறு தரப்­பி­ன­ருக்கு இலஞ்­ச­மாக வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்ள நிலையில் அது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தேடப்பட்டுவந்த ஹஷினி ரத்னாயக்க பொலிஸ் நிலையத்தில் சரணடையவில்லையாயின், அவரை மறைத்துவைத்துள்ள குற்றத்துக்காக அவரது கணவரான விக்டர் ரத்னாயக்கவை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 147 times, 1 visits today)

Post Author: metro