ஆஸி.பகிரங்க டென்னிஸிலிருந்து அஸரென்கா வாபஸ்: குழந்தை பராமரிப்பு தொடர்பான வழக்கு காரணம்

அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் இரண்டு தட­வைகள் சம்­பி­ய­னான விக்­டோ­ரியா அஸ­ரென்கா இவ் வருடப் போட்­டி­க­ளி­லி­ருந்து வாபஸ் பெற்­றுள்ளார்.

அவ­ரது 11 மாத ஆண் குழந்­தைக்கு யார் பாது­கா­வலர் என்ற சட்டப் பிரச்­சினை கார­ண­மா­கவே அவர் வாபஸ் பெற்­றுள்ளார். கடந்த வருடம் விம்­பிள்டன் போட்­டி­களின் பின்னர் தனது காதலர் பில்லி மெக்­கீ­கி­ட­மி­ருந்து அஸ­ரென்கா பிரிந்தார்.

இதை­ய­டுத்து இத்­தம்­ப­தியின் மகனை பரா­ம­ரிப்­பது யார் என்­பது தொடர்பில் வழக்கு விசா­ரணை அமெ­ரிக்க நீதி­மன்றில் நடை­பெ­று­கி­றது.

இந்த சட்டப் பிரச்­சி­னைக்­கான தீர்ப்பு கிடைக்கும் வரை பெலாரஸ் வீராங்­கனை அஸ­ரென்­காவால், அமெ­ரிக்­கா வின் கலி­போர்­னியா மாநி­லத்தை விட்டு வெளி­யே­ற­மு­டி­யாது என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

28 வய­தான விக்­டோ­ரியா அஸ­ரென்கா, 2012, 2013 ஆம் ஆண்­டு­களில் அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் தொடரின் ஒற்­றையர் சம்­பியன் பட்­டங்­களை வென்­றமை
குறிப்­பி­டத்­தக்­கது.

(Visited 32 times, 1 visits today)

Post Author: metro