தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக வீடு வீடாக சென்ற வேட்­பா­ளரின் மோட்டார் சைக்கிள் திரு­டப்­பட்­ட­தாக பொலிஸில் புகார்!

(மயூரன்)

தேர்தல் பிர­சா­ரத்­துக்­காக வீடு­க­ளுக்கு சென்ற வேட்­பா­ளரின் மோட்டார் சைக்கிள் திரு­டப்­பட்டுள்­ள­தாக சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

சாவ­கச்­சேரி பிர­தேச சபையின் கைதடி தெற்கு வட்­டா­ரத்தில் போட்­டி­யிடும் ஒருவர் கைதடி தெற்கில் தான் போட்­டி­யிடும் வட்­டா­ரத்தில் உள்ள வீடு­க­ளுக்கு தேர்தல் பரப்­பு­ரைக்­காக சென்­றுள்ளார்.

அதன் போது வட்­டார எல்­லையில் தனது மோட்டார் சைக்­கிளை நிறுத்தி விட்டு நடை­யாக ஒவ்­வொரு வீடு­க­ளாக சென்று வாக்கு கோரி பரப்­புரை செய்­துள்ளார்.

பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிள் நிறுத்­திய இடத்­துக்குத் திரும்பி வந்த போது அவ்­வி­டத்தில் மோட்டார் சைக்­கிளை காண­வில்லை. இத­னை­ய­டுத்து மோட்டார் சைக்கிள் திரு­டப்­பட்ட சம்­பவம் தொடர்பில் சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்­துள்ளார். இந்தச் சம்­பவம் தொடர்பில் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

(Visited 20 times, 1 visits today)

Post Author: metro