இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்: ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் தலைவரானார்

(நெவில் அன்­தனி)

இரு­வகை சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர்கள் போட்­டி­க­ளுக்­கான இலங்கை அணியின் தலைவர் பத­வியை ஏஞ்­சலோ மெத்யூஸ் மீண்டும் ஏற்­றுள்ளார்.

ஸிம்­பாப்­வேக்கு எதி­ரான தொடரில் அடைந்த தோல்­வியை அடுத்து அணித் தலைவர் பத­வியை ஏஞ்­சலோ மெத்யூஸ் துறந்த ஆறு மாதங்­களில் மீண்டும் அந்தப் பொறுப்பு அவ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணப் போட்­டிக்கு அப்­பாலும் அவர் தலை­வ­ராக பதவி வகிப்பார் என தெரி­வுக்­குழுத் தலைவர் க்ரஹம் லெப்ரோய் கூறினார்.

இதன் மூலம் அணித் தலைவர் பத­வி­களில் இடம்­பெற்­று­வந்த தொடர்ச்­சி­யான மாற்­றங்­க­ளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளது. அத்­துடன் அணியின் புதிய தலைமைப் பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவின் யோச­னை­க­ளையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் கவ­னத்­தில்­கொண்டு ஏஞ்­சலோ மெத்­யூஸை அணித் தலை­வ­ராக நிய­மித்­துள்­ளது.

வெள்ளைப் பந்து விளை­யாட்­டுக்­கான அணித் தலைவர் பதவி ஏஞ்­சலோ மெத்­யூ­ஸுக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் நிறை­வேற்றுக் குழு­வினர் ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னித்­த­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

இலங்கை அணியின் பயிற்­று­ந­ராக ஹத்­து­ரு­சிங்க நிய­மிக்­கப்­பட்­டதன் பல­னாக தனக்கு மீண்டும் அணித் தலைவர் பதவி கிடைத்­துள்­ளதை இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தில் நேற்று நடை­பெற்ற ஊடக­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது மெத்யூஸ் உறுதி செய்தார்.

‘‘அணித் தலைவர் பத­வி­யி­லி­ருந்து நான் வில­கிய பின்னர் மீண்டும் அப் பத­வியைப் பொறுப்­பேற்­பது குறித்து நான் ஒரு­போதும் எண்­ண­வில்லை. ஏனெனில் ஒன்றைக் கைவிட்ட பின்னர் அதனை திரும்பிப் பார்ப்­ப­தில்லை. ஆனால் இந்­தி­யா­வி­லி­ருந்து நாங்கள் நாடு திரும்­பிய சூட்­டோடு, தலைவர் (திலங்க சும­தி­பால) என்­னோடு கலந்­து­ரை­யா­டினார்.

 

அத்­துடன் எமது புதிய பயிற்­றுநர் ஹத்து அண்ணன் (சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க), தெரி­வா­ளர்கள் ஆகி­யோரும் என்­னோடு கலந்­து­ரை­யாடி அணித் தலைவர் பத­வியைப் பொறுப்­பேற்­பது குறித்து ஆலோ­சிக்­கு­மாறு கோரினர். நேர்­மை­யாகக் கூறு­வ­தென்றால் அது குறித்து சிந்­திக்க எனக்கு சில தினங்கள் தேவைப்­பட்­டன. அது இலகு­வா­ன­தொன்­றல்ல. எனினும் சில கார­ணங்­க­ளுக்­காக நான் அணித் தலைவர் பத­வியை ஏற்க தீர்­மா­னித்தேன். ஏனெனில் இது தேசிய அழைப்பு என தலைவர் கூறி­ய­தையும் நான் மனதில் நிறுத்தி அப் பத­வியைப் பொறுப்­பேற்கத் தீர்­மா­னித்தேன்’’ என்றார் மெத்யூஸ்.


‘‘இன்னும் 18 மாதங்­களில் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ணப் போட்­டிக்கு அணியில் உறு­தி­நிலை தேவை என்­பது மற்­றொரு கார­ண­மாகும். அத்­துடன் ஹத்து அண்­ணனை நான் மிக நீண்ட கால­மாக அறிவேன். அவர் எவ்­வாறு செயற்­ப­டுவார் என்­ப­தையும் அறிவேன். அவர் வெறு­மனே பிழைப்­ப­தற்­காக இங்கு வர­வில்லை.

 

அதனை நான் நன்கு அறிவேன். அவ­ருடன் பணி­யாற்­று­வது இல­கு­வா­னது. மற்­றைய நாடுகள் பெரி­தாக விரும்பும் ஒரு­வரை பயிற்­று­ந­ராக நாம் கொண்­டி­ருப்­பது பெரிய விட­ய­மாகும். கிரிக்கெட் எனக்கு நிறைய தந்­துள்­ளது. அப்­படி இருக்­கையில் மிகவும் அவ­சி­ய­மான வேளையில் நான் புற­மு­துகு காட்­டினால் கிரிக்கெட் விட­யத்தில் நான் சரி­யா­னதை செய்­த­வ­னாக இருக்க முடி­யாது. நாட்­டுக்­கா­கவும் அணிக்­கா­கவும் என்­னா­லான சக­ல­தையும் செய்வேன். சிலர் அதனை விரும்­பலாம்.

அல்­லது விரும்­பாமல் விடலாம். அதற்கு என்னால் எதுவும் செய்­ய ­மு­டி­யாது. நாங்கள் இரு­வரும் இணைந்து நாட்­டுக்­கா­கவும் அணிக்­கா­கவும் சிறந்­த­வற்றை செய்வோம்’’ எனவும் ஏஞ்­சலோ மெத்யூஸ் குறிப்­பிட்டார்.

‘‘இலங்கை ஏ அணிக்­காக நான் விளை­யா­டி­ய­போது அணி பயிற்­று­ந­ரா­கவும் நான் தேசிய அணியில் இடம்­பெற்ற ஆரம்­ப­கா­லத்தில் நிழல் பயிற்­று­ந­ரா­கவும் அவர் செயற்­பட்டார். எனவே அவரை நான் நன்கு அறிவேன். அவ­ருடன் இணைந்து செயற்­ப­டு­வது மிகவும் இல­கு­வா­னது’’ எனவும் மெத்யூஸ் கூறினார்.

இதே­வேளை ஏஞ்­சலோ மெத்யூஸ் உபா­தைக்­குள்­ளா­வது குறித்து அணி முகா­மைத்­து­வமும் தெரி­வா­ளர்­களும் கவனம் செலுத்­து­கின்­ற­போ­திலும் மெத்­யூஸ்தான் தலை­மைத்­து­வத்­து­வுக்கு பொருத்­த­மா­னவர் என ஹத்­து­ரு­சிங்க தெரி­வித்தார்.

‘‘தனது சொந்த ஆற்றல் வெளிப்­பா­டு­க­ளினால் தனது இடத்தை உறுதி செய்­து­கொண்­டுள்ள அவர்தான் சர்­வ­தேச ஒருநாள் அணிக்கு தலைமைதாங்க அதி சிறந்தவர் என எனது உள்மனம் கூறுகின்றது. அவரது உடற்தகுதிதான் எங்களை உறுத்துகின்றது. அவருக்கு உதவ எங்களிடம் திட்டம் இருக்கின்றது’’ என்றார் சந்திக்க ஹத்துருசிங்க.

பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சுற்றுப் பய­ணத்தில் மெத்யூஸ் பெரும்­பாலும் துடுப்­பாட்ட வீர­ராக மாத்­தி­ரமே பங்­கு­பற்­றுவார். அவ­சியம் தேவைப்­பட்டால் மாத்­தி­ரமே பந்­து­வீச்சில் ஈடுபடுவார்.

(Visited 51 times, 1 visits today)

Post Author: metro