ஜெயாவின் உடல் பதப்படுத்தல் குறித்து உடற்­கூறு மருத்­துவரின் விளக்கம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவின் உடலை பதப்­ப­டுத்­தி­யமை தொடர்­பான ஆதா­ரங்­களை முன்னாள் நீதி­ய­ரசர் ஆறு­மு­க­சாமி தலைமையிலான விசா­ரணை ஆணை­யத்தில் சென்னை மருத்­துவக் கல்­லூரி துணைத் தலைவர் மருத்­துவர் சுதா சேஷய்யன் சமர்ப்­பித்­தி­ருக்­கிறார் ” என்­கின்­றனர் தமி­ழக அரச மருத்­து­வர்கள்.

முன்னாள் முதல்வர் ஜெய­ல­லிதா மரணம் தொடர்­பான விசா­ர­ணையைத் தீவி­ரப்­ப­டுத்தி வரு­கிறார் முன்னாள் நீதி­ய­ரசர் ஆறு­மு­க­சாமி. ஆணை­யத்தில் ஆஜ­ரான பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறிய மருத்­துவர் சுதா சேஷய்யன், `ஜெய­ல­லி­தாவின் உடல் பதப்­ப­டுத்­தப்­ப­ட்டமை குறித்து நீதி­ப­தி­யிடம் விளக்­கினேன்.

கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி இரவு 10.30 மணி­ய­ளவில் எனக்கு தொலை­பேசி அழைப்பு வந்­தது. ஜெய­ல­லிதா உடல் கெட்­டுப்­போ­காமல் இருப்­ப­தற்கு ‘எம்­பாமிங்’ செய்ய வேண்டும் என்று கூறினர். நான் இரவு 11.40 மணி­ய­ளவில் அப்­பலோ மருத்­து­வ­ம­னைக்குச் சென்­று­விட்டேன்.

12.20 மணிக்கு எம்­பாமிங் செய்­யப்­பட்­டது’ எனச் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­யுள்ளார். `ஜெய­ல­லிதா 11.30 மணிக்கு இறந்தார்’ என அப்பலோ நிர்­வாகம் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை வெளி­யிட்­டுள்ள நிலையில், `10.30 மணிக்கு அழைப்பு வந்­தது’ என சுதா தெரி­வித்த கருத்­துகள் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­விட்­டன.

மருத்­துவர் சுதா சேஷய்­ய­னிடம் பேசினோம். “ஓர் அர­சாங்க ஊழி­ய­ராக இருப்­பதால் இந்த விவ­காரம் குறித்து என்னால் எதுவும் பேச இய­லாது” என்­ற­தோடு முடித்­துக்­கொண்டார். அவர் தரப்பு செய்­தி­யா­ளர்­க­ளிடம் விளக்­க­மாக பேச முன்­வந்தார் அரசு உடற்­கூறு மருத்­துவர் ஒருவர். அவ­ரிடம் சில கேள்­வி­களை முன்­வைத்தோம்.

ஒரு சாதா­ரண மனி­தனின் இறப்பில் ஏற்­படும் சந்­தே­கங்­களைத் தீர்த்­துக்­கொள்­வ­தற்கு சட்டம் வழி­வகை செய்­கி­றது. ஒரு மாநி­லத்தின் முதல்­வ­ராக இருந்­த­வரின் மர­ணத்தில் ஏன் இவ்­வ­ளவு மர்மம்?

ஜெய­ல­லிதா இறந்த அன்று, இப்­போது கேட்­கப்­படும் எந்தக் கேள்­வி­களும் கேட்­கப்­ப­ட­வில்லை. அப்ப­லோ நிர்­வாகம் கொடுத்­துள்ள இறப்பு சான்­றி­தழில் வெண்ட்­ரி­குலர் பிப்­ரி­லேஷன்(ஏ.ஆர்.டி.எஸ்) எனக் குறிப்­பிட்­டுள்­ளனர். அவர் இறந்து நான்­கைந்து நாட்கள் கழிந்த பிற­குதான் மர்மம் எனப் பேசத் தொடங்­கி­னார்கள். ஜெய­ல­லி­தாவின் இரத்த சம்­பந்­த­முள்ள வாரி­சுகள், கிளி­னிக்கல் அட்­டாப்சி மூலம் இதைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். அன்று ஜெய­ல­லி­தா­வுடன் யார் இருந்­தார்கள். அவர் இறந்த 24 மணி நேரத்தில் ஒரு­வரும் எந்தக் கேள்­வியும் எழுப்­ப­வில்­லையே…

ஆணைய விசா­ர­ணையில், ‘ஜெய­ல­லிதா இறந்த அன்று இரவு 10.30 மணிக்கு அழைப்பு வந்­தது’ என்­கிறார் சுதா சேஷய்யன். ஆனால், ‘11.30 மணிக்கு இறந்தார்’ என அப்ப­லோ நிர்­வாகம் அறி­வித்­தது. ஏன் இந்த முரண்­பாடு?

இதைப் பற்றி விரி­வாகப் பேச ஆரம்­பித்தால், ஆணை­யத்தின் விசா­ரணைப் போக்கை திசை­மாற்­றி­ய­தாக ஆகி­விடும். அப்­ப­லோ­வி­லுள்ள ஆவ­ணங்­களில் மாற்றம் செய்­வ­தற்கும் வழி ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­து­போ­லா­கி­விடும். எங்­க­ளிடம் சில ஆதா­ரங்கள் இருக்­கின்­றன. 10.30 மணிக்குத் தகவல் வந்­த­தை­ய­டுத்து, மருத்­துவர் சுதா அப்­பலோ மருத்­து­வ­ம­னைக்குச் சென்றார்.

தொண்­டர்­களின் கூட்டம் அதி­கப்­ப­டி­யாக இருந்­ததால், அவரால் செல்ல முடி­ய­வில்லை. 11.20 மணிக்கு கிரீம்ஸ் வீதியில் அவர் நடந்து­கொண்­டி­ருந்தார். “அந்த வீதியில் நுழைய முடி­ய­வில்லை. எனக்கு வாகனம் அனுப்­புங்கள்” என அப்­பலோ மருத்­து­வர்­க­ளுக்கு அவர் அனுப்­பிய எஸ்.எம்.எஸ் ஆதாரம் உள்­ளது.

11.40 மணிக்­குத்தான் அவரால் உள்ளே நுழைய முடிந்­தது. அங்­கி­ருந்த மருத்­து­வர்கள், ‘முதல்வர் உடலை சுத்­தப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கிறோம். சற்றுப் பொறுங்கள்’ எனக் கூறி­னார்கள். அதன் பிறகு 12 மணிக்கு எம்­பாமிங் நடவடிக்கைகளை சுதா ஆரம்பித்தார். `11.30 மணிக்கு அவர் இறந்தார்’ என அப்­பலோ கொடுத்த சான்­றிதழ் எங்­க­ளி­ட­மும்­ உள்­ளது. அவர்கள் கொடுத்த சான்­றி­தழ்­படி 11.30 மணி என நாங்கள் பேசினால், எங்­களிடம் இருக்கும் இதர ஆதா­ரங்கள் அதைக் காட்டிக் கொடுத்­து­விடும். நாங்கள் பொய் பேசுகிறோம் என்­பது போல் ஆகிவிடும்.

அப்­பலோ மருத்துவமனையின் எந்த அறையில் பதப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன?
இரண்­டா­வது மாடியில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐ.சி.யு.) அறை என அவர்கள் கூட்டிச் சென்ற அறை­யில்தான் மேற்­கொள்­ளப்­பட்­டன. மருத்­து­வ­ம­னையின் வடி­வ­மைப்பைப் பற்றி எங்­க­ளுக்குத் தெரி­யாது.

ஒரு சந்­தேகம். அடுத்த 17 மணி நேரத்தில் புதைக்­கப்­பட இருக்கும் ஓர் உட­லுக்கு, அதுவும் இரட்டை அமுக்கி வசதி கொண்ட குளிர்­ப­தனப் பெட்­டியில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஜெய­ல­லி­தாவின் உடலை பத­ப்ப­டுத்த வேண்­டிய சூழல் எதனால் ஏற்­பட்­டது?
பத­ப்ப­டுத்த வேண்டும் என்­பது எங்­க­ளு­டைய தனிப்­பட்ட முடிவு கிடை­யாது.

எங்­க­ளுக்கு பதப்­ப­டுத்த வேண்டும் என்ற உத்­த­ரவு வந்­தது. அதில் ஒரு நியாயம் இருந்­தது. ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் அவ­ருக்கு இறுதி அஞ்­சலி செலுத்­தும்­போது, அந்த உடலில் இருந்து வாடை வரலாம். இரண்டு மாதங்­க­ளுக்கும் மேலாக அவர் மருத்­து­வ­ம­னையில் தங்­கி­யி­ருந்தார்.

பிர­தமர் உட்­பட முக்­கியப் புள்­ளிகள் வரு­வதால், இந்த வாடை தெரி­யாமல் இருக்க பதப்­ப­டுத்தும் முடிவை அவர்கள் எடுத்­தி­ருக்­கலாம். பதப்­ப­டுத்­து­வது என்­பது நடை­மு­றையில் உள்ள ஒன்­றுதான்.

தானி­யங்கி இயந்­திரம் மூலம் அரை­மணி நேரத்தில் பதப்­ப­டுத்­தப்­பட்டு முடிக்­கப்­பட்­டு­விட்­டது’ என்­கிறார் மருத்­துவர் சுதா சேஷய்யன். வலது தொடையில் உள்ள பெமோரல் தமணி வழி­யாக இரத்­தத்தை முழு­மை­யாக எடுப்­ப­தற்கே 20 நிமிடம் ஆகும் என்­கி­றார்கள். அப்­ப­டி­யானால், எப்­படி 30 நிமி­டத்­துக்குள் எம்­பாமிங் செய்து முடித்­தி­ருக்க முடியும்?

இரத்­தத்தை முழு­மை­யாக எடுப்­பது என்­பது நடை­மு­றையில் கிடை­யாது. தொழில்­நுட்­ப­ரீ­தி­யாக இது தவ­றான தகவல். எங்­க­ளது அனா­டமி துறையில் தினமும் மூன்று, நான்கு உடல்­க­ளுக்கு எம்­பாமிங் செய்து வரு­கிறோம். அதற்­கான நவீன வச­தி­களைக் கொண்டு வந்­தி­ருக்­கிறோம். 15 ஆண்­டு­க­ளுக்கு முன்­பெல்லாம் பதப்­ப­டுத்­தும்­போது, கேன் ஒன்றைக் கட்டித் தொங்­க­விட்­டு­விட்டு இரவு முழு­வதும் இரத்­தத்தை வெளியில் எடுப்போம்.

சுமார் எட்டு மணி நேரம் செல­வாகும். இதெல்லாம் மிகவும் பழைய நடை­மு­றைகள். இப்­போது கெமிக்கல் ஆட்­டோ­மேடிக் இயந்­தி­ரங்கள் வந்­து­விட்­டன. ரத்­தத்தை எடுக்க வேண்­டிய அவ­சி­யமே கிடை­யாது.

முதல்­வரின் சமூக வழக்­கப்­படி உடலை எரி­யூட்­டு­வது மரபு. பதப்­ப­டுத்­தும்­போது, எளிதில் வெடிக்­கக்­கூ­டிய ஐசோ புரபைல் அல்கஹாலைக் கலந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறதே?

“அவ்வாறு வெடிக்காது. ஐசோ புரபைல் அல்கஹால் வெடிக்கும் எனச் சிலர் பேசலாம். மெக்னீஸியத்தைக் காற்றில் வைத்தால் எளிதில் தீப்பிடிக்கும். விலை உயர்ந்த சிறிய ரக கார்களின் என்ஜின்களில் மெக்னீஸியத்தை வைத்திருக்கிறார்கள். இந்த இரசாயனம் இன்ஜினுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கும் என்பதற்காகக் கலக்கிறார்கள். அதே மெக்னீஸியத்தை வெளியில் வைத்தால் தீப்பிடிக்கும். இதுதான் அறிவியல். இதேபோல்தான், ஐசோ புரபைல் அல்கஹாலும் எனத் தெரி வித்துள்ளார்.

(நன்றி விகடன்)

(Visited 26 times, 1 visits today)

Post Author: metro