சிறிய வழக்கை பதிவு செய்யக் கோரி பொலி­ஸா­ருக்கு இலஞ்சம் கொடுப்­ப­தற்கு முய­ற்­சித்த நபர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்)

ஹெரோயின் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ள உற­வி­ன­ரான பெண் ஒருவர் மீது சிறிய குற்­றச்­சாட்டு ஒன்றைச் சுமத்தி வழக்கு பதிவு செய்ய பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு 2 இலட்சம் ரூபாவை இலஞ்­ச­மாக வழங்க முயற்­சித்த சந்­தேக நபர் ஒரு­வரை இலஞ்ச ஊழல் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழு­வினர் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது.

களனி வல­யத்­துக்கு உட்­பட்ட மீக­ஹ­வத்த பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தக­வ­லுக்கு அமைய மேற்­கொண்ட சுற்­றி­வ­ளைப்­பின்­போது நேற்று முன்­தினம் 1 கிராமும் 62 மில்­லி­கி­ராமும் அள­வு­டைய ஹெரோ­யினை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் தெல்­கொட, சியம்­ப­லா­பே­வத்த பிர­தே­சத்தைச் சேர்ந்த 25 வய­தான பெண் ஒரு­வரை முக­லான பிர­தே­சத்தில் வைத்து கைது செய்­துள்­ளனர்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட பெண்­ணுக்கு எதி­ராக, போதைப்­பொருள் குற்­றச்­சாட்டு அல்­லாமல் வேறொரு சிறு­குற்றம் தொடர்பில் வழக்குத் தொட­ரு­மாறு அப்­பெண்ணின் சகோ­தரர் ஒருவர், நேற்­றுக்­காலை இலஞ்சத் தொகை­யுடன் மீக­ஹ­வத்த பொலிஸ் நிலையக் குற்­றப்­பி­ரிவு பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் சென்று பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார்.

அதன்­பின்னர், இந்தக் கோரிக்கை தொடர்பில் குற்­றப்­பி­ரிவு பொறுப்­ப­தி­காரி, பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­வித்­த­தை­ய­டுத்து அவர் ஊடாக இலஞ்ச, ஊழல் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுக்கு தகவல் வழங்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து, மீக­ஹ­வத்த பொலிஸ் நிலை­யத்­துக்கு விரைந்த ஆணைக்­குழு அதி­கா­ரிகள், இலஞ்சம் வழங்க முயற்­சித்த சந்­தேக நபரை பொலிஸ் நிலை­யத்தில் வைத்து கைது செய்­துள்­ளனர்.

தனது சகோ­த­ரியைக் காப்­பற்­று­வ­தற்கு பொலிஸ் நிலை­யத்­துக்­கு­வந்த இச்­சந்­தேக நபர், 1,30,000 ரூபாவை ரொக்­க­மா­கவும், மிகு­திப்­ப­ணத்­துக்­காக கைதா­கி­யுள்ள பெண்­ணுக்கு சொந்­த­மான வங்கி அட்­டை­யையும் வழங்க முற்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இலஞ்சம் வழங்க முயற்­சித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட தெல்­கொட, சியம்­ப­லா­பே­வத்த பிர­தே­சத்தை சேர்ந்த 28 வய­தான இளைஞர் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்­கு­ழு­வினர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள அதேவேளை, ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பெண் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் விசாரணைகளை முன் னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர், ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

Post Author: metro