பண்­டி­கை தினத்தில் படம் வௌியா­வது மகிழ்ச்சி – சூர்­யா

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் மது அருந்­து­வது போலவோ, புகை­பி­டிப்­பது போன்றோ காட்­சிகள் கிடை­யாது. 7 வரு­டங்­க­ளுக்குப் பிறகு பண்­டிகை தினத்­தன்று படம் வரு­வது மகிழ்ச்சி அளிக்­கி­றது என்று சூர்யா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்­ப­டத்தின் பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பில் சூர்யா, தயா­ரிப்­பாளர் ஞான­வேல்­ராஜா , கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, இயக்­குநர் விக்னேஷ் சிவன் உள்­ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் சூர்யா பேசி­ய­தா­வது: அனை­வ­ருக்கும் புத்­தாண்டு நல்­வாழ்த்­துக்கள். அனை­வ­ருக்கும் எல்லா கன­வு­களும் சிறப்­பாக நிறை­வே­ற­ வேண்டும். நமது துறை­யி­லி­ருந்து அடுத்த பய­ணத்தைத் தொடங்க இருக்கும் ரஜினி சாருக்கும், கமல் சாருக்கும், விஷா­லுக்கும் என்­னு­டைய வாழ்த்­துகள்.

எல்­லோ­ரு­டைய வரவும் நல்­வ­ர­வாக இருக்­க­வேண்டும். எங்கள் அனை­வரின் ஆத­ரவும் அவர்­க­ளுக்கு உண்டு. எனக்கு அறி­முகம் கிடைத்த சில இயக்­கு­நர்கள் எடுத்த முடி­வுகள் என்­னு­டைய வாழ்­கையில் முக்­கி­ய­மாக அமைந்­துள்­ளன. அப்­படி ஒரு சந்­தர்ப்­பத்­தில்தான் இந்தக் கூட்­டணி இணைந்­தது.

விக்னேஷ் சிவனை சந்­திக்கப் போவ­தாக ஹரி சாரிடம் கூறினேன். அதற்கு அவர் நிச்­ச­ய­மாக அவ­ருடன் படம் பண்­ணுங்கள் என்றார். என் வீட்டில் உள்ள அனை­வரும் அவ­ருடன் படம் பண்­ண­வேண்டும் என்று கூறி­னார்கள். 1987- இல் நடந்த உண்மைச் சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தானா சேர்ந்த கூட்டம் படம் எடுக்­க­ப்பட்­டது என்­றாலும் முற்­றிலும் வேறு ஓரு பாதையில் கதை செல்­கின்­றது. முதல் சந்­திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்­பாக அமைந்­தது.

7 வரு­டங்­க­ளுக்கு பிறகு பண்­டிகை தினத்­தன்று படம் வரு­வது மகிழ்ச்­சி­யாக உள்­ளது. எல்லாப் படங்­க­ளிலும் தொடக்­கத்தில் வரும் புகை பிடிக்­காதீர், மது அருந்­தாதீர் போன்ற அறிவிப்பு எங்கள் படத்தில் வராது. அப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார்.

அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். மேலும், இந்தப் படத்தில் சீனியர் கலைஞர்களான செந்தில், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார் சூர்யா.

(Visited 32 times, 1 visits today)

Post Author: metro