பாட­சாலை சீரு­டைத்­துணி வவுச்­சர்­களின் செல்­லு­ப­டி­க்காலம் ஜன­வரி 30 வரை நீடிப்பு

(எம்.சி.நஜி­முதீன்)

பாட­சாலை மாண­வர்கள் சீரு­டைத்­துணி கொள்­வ­னவு செய்­வ­தற்­காக கல்­வி­ய­மைச்­சினால் வழங்­கப்­பட்­டுள்ள வவுச்­சர்­களின் செல்­லு­படிக் காலம் எதிர்­வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார். கல்­வி­ய­மைச்சு விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, 2018 ஆம் கல்­வி­யாண்­டுக்­காக பாட­சாலை மாண­வர்கள் சீரு­டைத்­துணி பெறு­வ­தற்­காக விநி­யோ­கிக்­கப்­பட்ட வவுச்­சர்கள், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திக­தி­வரை செல்­லு­ப­டி­யாகும் என ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் மாண­வர்கள் சிலர் இன்னும் சீருடைத் துணி கொள்­வ­னவு செய்­ய­வில்லை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

கவே அவ்­வாறு குறித்த காலப்­பகுதியில் சீரு­டைத்­து­ணி­களை கொள்­வ­னவு செய்ய முடி­யா­து­போன மாண­வர்­களின் நலன் கரு­தியே வவுச்­சர்­களின் செயல்­லு­ப­டிக்­கால எல்­லையை எதிர்­வரும் 30 திக­தி­வரை நீடித்­துள்­ள­தா­கவும் அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Post Author: metro