பிணை­முறி அறிக்­கையை சமர்ப்­பிக்­காமல் பிர­தமர் உரை­யாற்ற முயற்­சித்­ததால் நாடாளுமன்றத்தில் அமளிதுமளி

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்கை மத்­திய வங்கி பிணை­மு­றிகள் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை நேற்று நாடாளு­மன்­றத்­துக்குச் சமர்ப்­பிக்­கா­மைக்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன்­னணி, கூட்டு எதிர்க்­கட்சி ஆகி­யன போர்க்­கொடி தூக்­கி­ய­மை­யினால் ஆளும், எதிர்க்­கட்­சி­யி­டையே கடும் வாக்­கு­வாதம் ஏற்­பட்டு அமை­தி­யின்மை நில­வி­யது.

நாடா­ளு­மன்­றத்தை அவ­ச­ர­மாக கூட்­டு­வ­தற்­கான கார­ணத்தைக் குறிப்­பிட்டு சபா­நா­யகர் விடுத்த அறி­விப்­பினை நாடா­ளு­மன்றச் செய­லாளர் அறி­வித்தார். இத­னை­ய­டுத்து சபா­நா­யகர் கருஜ­ய­சூ­ரிய தனது அறி­விப்­பினை விடுத்தார்.

இந்த நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது விசேட உரையைத் தொடர்ந்து கொண்­டி­ருந்­த­போது, கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் சபா மண்­ட­பத்­துக்குள் பிர­வே­சித்து. கோஷங்­களை எழுப்­பினா். பதி­லுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்­களும் கோஷங்­களை எழுப்­பி­ய­தோடு பிர­தமர் ரணிலின் விசேட கூற்று இடை­யூ­றுகள் எழாத வண்ணம் பாது­காப்பு வலயம் அமைத்­தி­ருந்­தனர்.

கூடடு எதிர்க்­கட்­சி­யி­னரால் சபையில் அமை­தி­யற்ற நிலை­மையே நீடித்­தது. இருந்­தது. எவ்­வா­றா­யினும் பிர­தமர் தனது விசேட உரையை நிறுத்­தாது தொடர்ந்து அவ­ரது உரையின் இறு­தியில், யார் திருடர், யார் திருடன் என்று தனது தரப்பு உறுப்­பி­னர்­க­ளுடன் சேர்ந்து கோஷம் எழுப்ப ஆரம்­பித்தார்.

ஒத்­தி­வைக்­கப்­பட்ட சபை

இச்­ச­ம­யத்தில் அனைத்து உறுப்­பி­னர்­க­ளையும் அமை­தி­காக்­கு­மாறு, சபா­நா­யகர் கோரி­ய­போதும், உறுப்­பி­னர்கள் ஆச­னங்­களில் அமர்­வ­தாக இல்லை. ஆளும் எதிர்த்­த­ரப்பு உறுப்­பி­னர்கள் சபா­மண்­ட­பத்­தி­னுள்ளே இருந்­தார்கள். இவ்­வா­றான நிலையில் நிலை­மை­களை கட்­டுப்­பாட்­டிற்­குள்­கொண்­டு­வர முடி­யாது போன­தை­ய­டுத்து சபா­ய­நா­யகர் முற்­பகல் 11.05 க்கு சபை நட­வ­டிக்­கை­களை 10 நிமி­டங்­க­ளுகு ஒத்­தி­வைப்­ப­தா­கவும், கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்­துக்கு அழைப்பு விடுப்­ப­தாகும் அறி­வித்தார்.
அத­னை­ய­டுத்து கட்­சித்­த­லை­வர்கள் கூட்டம் சபா­நா­யகர் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­ற­போதும், மக்கள் விடு­தலை முன்­னணி அதில் பங்­கேற்­காது புறக்­க­ணித்­தது. எம்.பி குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து மீண்டும் சபை­ந­ட­வ­டிக்­கைகள் 11.50 க்கு ஆரம்­ப­மா­கின. இதன்­போது ஜனா­தி­பதி செய­ல­கத்­தி­லி­ருந்து சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வுக்கு கிடைத்த கடி­தத்தை வாசித்­தவர் தொடர்ந்து பிர­த­மரின் விசேட அறிக்­கயை முழு­மை­யாக விடுக்­கு­மாறு கோரினார்.

இச்­சர்ந்­தப்­பதில் மீண்டும் ஜே.வி.பி.தலைவர் அநு­ர­கு­மரா திஸா­நா­யக்க, தினேஷ் குண­வர்த்­தன, நாமல் ராஜ­பக்க்ஷ, சந்­தி­ர­சிறி கஜ­தீர ஆகியோர் கடு­மை­யான எதிர்ப்­பினை வெளி­யிட்­டார்கள். எனினும் சபா­நா­யகர் பிர­த­ம­ருக்­கான வாய்ப்பை வழங்­கினார். பிர­தமர் தனது விசேட அறிக்­கையை மீண்டும் ஆரம்­பித்­த­போது கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரும், மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னரும் சபை­யி­லி­ருந்து வெளி­யேறிச் சென்­றார்கள்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் விசேட கூற்­றை­ய­டுத்து சுதந்­தி­ரக்­கட்சி சார்பில் பிர­தி­ய­மைச்சர் லசந்த அழ­கிய வண்­ணவும், இரா­ஜங்க அமைச்சர் சுஜீவ சேர­சிங்­கவும், உரைகளை நிகழ்த்தினார் அதன் பினன்ர் சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல விவாதத்தை கோரியவர்கள் யாரும் சபையில் இல்லை. ஆகவே விசேட அறிவிப்பு பிரதமரால் நிறைவு செய்யப்பட்ட நிலையில் நாம் சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்போம் என்று முன்மொழிவைச் செய்து நண்பகல் 12.20க்கு எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் சபை நடவடிக்கைகள ஒத்திவைத்தார்.

(Visited 38 times, 1 visits today)

Post Author: metro