கப்­ப­லுடன் படகு மோதி இருவர் உயி­ரி­ழப்பு; மாத்­தறை, தேவேந்­தி­ர­முனைக் கடலில் சம்­பவம்

(ரெ.கிறிஷ்­ணகாந், எம்.எப்.எம்.பஸீர்)

மாத்­தறை, தேவேந்­தி­ர­முனைக் கடற்­ப­ரப்பில் பாரிய கப்பல் ஒன்­றுடன் ஆழ்­கடல் மீன்­பி­டிப்­ப­டகு ஒன்று மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஒருவர் காணாமல் போயுள்­ள­தாக கடற்­படைப் பேச்­சாளர் கொமாண்டர் தினேஷ் பண்­டார தெரி­வித்­துள்ளார்.

தேவேந்­தி­ர­மு­னை­யி­லி­ருந்து தெற்­காக 13 கடல்மைல் தொலை வில் ஆழ்­கடல் பகு­தியில் நேற்­று­ முன்­தினம் இரவு 11.30 மணி­ய­ளவில்  இந்­தி­யாவின் சென்­னை­யி­லி­ருந்து ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நோக்கி வாக­னங்­களை ஏற்­றிச்­சென்ற கப்­ப­லொன்­றுடன் நதீஷா– 2 என்ற பல்­பணி மீன்­பிடிப் படகு மோதி இவ்­வாறு விபத்து ஏற்­பட்­டுள்­ளது.


ஹிக்­க­டுவை மீன்­பிடி துறை­மு­கத்தில் இருந்து கடந்த 5 ஆம் திகதி ஆழ்­கடல் மீன்­பிடி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக கட­லுக்கு சென்ற இப்­ப­டகில் 7 பேர் பய­ணித்­தி­ருந்த நிலையில், அவர்­களில் ஒருவர் விபத்­துக்கு முன்­ன­தா­கவே மார­டைப்பால் உயி­ரி­ழந்­துள்ளார் எனவும் அவரின் சட­லத்தை கரையை நோக்கி எடுத்­து­வந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே இந்த விபத்து ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் கடற்­படைப் பேச்­சாளர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

மார­டைப்பால் உயி­ரி­ழந்த நபர் தவிர்ந்து, அகம்­பொ­லகே ரசிக கிதான (46வயது) அமித் விதான (27 வயது) ஆகி­யோரே உட்­யி­ரி­ழந்­துள்­ள­துடன் அனுர நலின் எனும் 39 வய­து­டைய மீன­வரே காணாமல் போயுள்ளார். விபத்­தை­ய­டுத்து வாகன கப்­பலில் இருந்­தோரால் மூன­ஙறு மீன­வர்கள் காப்­பாற்­றப்­பட்­டுள்­ளனர்.

இந் நிலையில் விபத்து இடம்­பெற்று மறு கனம் விடயம் கொழும்பு கடற்­படைத் தலை­மை­ய­கத்­துக்கு அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், கடற்­ப­டையின் பீ 492, பீ 480 ஆகிய அதி­வேக தக­குதல் பட­குகள் ( டோரா பட­குகள்) விபத்து இடம்­பெற்ற இடத்தை நோக்கி அனுப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்து உயி­ரி­ழந்த இரு மீன­வர்­களின் சட­லங்கள் நேற்று முற்­பகல் மீட்­கப்­பட்­ட­துடன் கரைக்கு எடுத்­து­வ­ரப்­பட்டு காலி, கராப்­பிட்­டிய வைத்­தி­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், காணாமல் போன நபரைத் தேடும் பணி­க­ளுக்­காக இரண்டு கடற்­படை சுழி­யோடிக் குழுக்கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தாக கடற்­படைப் பேச்­சாளர் கொமாண்டர் தினேஷ் பண்­டார தெரி­வித்தார்.

எனினும், மார­டைப்பால் மீனவ நட­வ­டிக்­கையின் போது உயி­ரி­ழந்த நபரின் சடலம் மீனவ பட­குக்­குள்­ளேயே இருப்­ப­தாக சந்­தே­கிப்­படும் நிலையில், விபத்தின் பின்னர் அந்த படகு கடலில் மூழ்­கு­வதை தடுக்க கடற்­ப­டை­யினர் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். அதன்­படி விபத்து இடம்­பெற்ற ஆழ் கடலில் தங்­கி­யி­ருந்து கடற்­ப­டை­யினர் மீனவப் படகை மூழ்க விடாது நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­துடன், காணாமல் போன மீன­வ­ரையும் தேடி வரு­கின்­றனர்.

காணா­மல்­போ­யுள்ள மீன­வரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நேற்று மாலை வரை அவர் மீட்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என கடற்­படைத் ட்டுள்ளதுடன், காணாமல் போன மீனவரையும் தேடி வருகின்றனர்.

காணா­மல்­போ­யுள்ள மீன­வரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நேற்று மாலை வரை அவர் மீட்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என கடற்­படைத் தக­வல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 38 times, 1 visits today)

Post Author: metro