தலை­மு­டிக்கு பல நிறங்­களில் வர்ணம் பூசி நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த நப­ருக்கு 3 மாதக் கடூ­ழியச் சிறை

(மயூரன்)

தலை­மு­டிக்கு பல நிறங்­களில் வர்ணம் பூசி நீதி­மன்றை அவ­ம­திக்கும் முக­மாக செயற்­பட்ட நபர் ஒரு­வ­ருக்கு மூன்று மாத கடூ­ழியச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஊர்­கா­வற்­துறை நீதிவான் நீதி­மன்றில் நேற்று நடை­பெற்ற வழக்கு ஒன்றின் விசா­ர­ணைக்­காக நீதி­மன்­றுக்கு வந்த சந்­தேக நப­ரொ­ரு­வ­ருக்கே நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் இந்தத் தண்­ட­னையை விதித்தார்.

இது குறித்து தெரிய வரு­வ­தா­வது, வழக்கு விசா­ர­ணைக்கு வந்த பிணையில் விடு­விக்­கப்­பட்ட சந்­தேக நப­ரொ­ருவர் தலை­மு­டிக்கு பல வர்­ணங்­களில் நிறம் பூசி, வித்­தி­யா­ச­மான முறையில் தலை­முடி அலங்­க­ரித்து நீதி­மன்­றுக்கு ஒவ்­வாத வகையில் ஆடை அணிந்து வந்­துள்ளார்.

குறித்த நபர் திறந்த நீதி­மன்றில் வழக்கு விசா­ர­ணைகள் நடை­பெற்ற போது மன்றில் அசா­தா­ர­ண­மான முறையில் நடந்து கொண்டார். அதன்­பின்னர் குறித்­த­ந­பரின் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போதும் குறித்த நபர் கூண்டில் ஏறி நிற்கும் போதும் அசா­தார­ண­மாக செயற்­பட்டார்.

அத­னை­ய­டுத்து குறித்த நப­ருக்கு எதி­ராக நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கைப் பதி­யு­மாறு நீதி­மன்ற பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­த­ருக்கு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

இதனை தொடர்ந்து பிறி­தொரு வழக்­காக குறித்த நப­ருக்கு எதி­ராக நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. அதன் மீதான விசாரணையையடுத்து நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.

(Visited 99 times, 1 visits today)

Post Author: metro