வெளி­நா­டு­களில் ஊதி­ய­மின்றி பணி­யாற்­றிய 125 பெண்கள் நாடு திரும்­பினர்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

வேலை­வாய்ப்­புக்­காக கடந்த வரு­டத்தில், வெளி­நா­டு­ க­ளுக்கு சென்று பல வரு­டங்­க­ளாக ஊதி­ய­மின்றிப் பணி­யாற்றி வந்த 125 இலங்­கையை சேர்ந்த பணிப்­பெண்கள் மீண்டும் நாட்­டுக்குத் திருப்பி அழைத்­து­வ­ரப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­ய­கத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவின் தலை­யீட்­டினால், இவ்­வாறு வர­வ­ழைக்­கப்­பட்ட இலங்­கை­யர்­களின் நிலுவை ஊதி­யத்தை பெற்றுக் கொடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அப்­ப­ணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாறு ஊதி­ய­மின்றி பணி­யாற்­றிய பணிப்­பெண்­களில், சவூதி அரே­பி­யாவில் 110 பேரும், குவைத்தில் பணி­யாற்­றிய 9 பேரும், துபாய், கத்தார் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடு­களில் பணி­யாற்­றி­வந்த 6 பேரும் மீண்டும் நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை, வெளி­நா­டு­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­காக சென்று வெவ்­வேறு பிரச்சி னைகளின் கார­ண­மாக தூத­ர­கங்­க­ளி­லுள்ள பாது­காப்பு முகாம்­களில் தங்­கி­யி­ருந்த 2390 இலங்கை பணிப்­பெண்­களை கடந்த வரு­டத்­தினுள் நாட்­டுக்கு அழைத்­து­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த வரு­டத்தில் 2 இலட்­சத்து 12 ஆயி­ரத்து 216 இலங்­கை­யர்கள் வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பு­க­ளுக்­காக சென்­றுள்­ள­துடன், அவர்­களில் 56,109 பேர் வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக சென்­றுள்­ளனர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவர்­களில் பெரும்­பா­லானோர் கத்தார் நாட்­டுக்கே பணிப்­பெண்­க­ளாக சென்­றுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் மேலும் ள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கத்தார் நாட்டுக்கே பணிப்பெண்களாக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 24 times, 1 visits today)

Post Author: metro