ஒரே தேசிய அடை­யாள அட்டை இலக்­கங்­களைக் கொண்ட பல வாக்­கா­ளர்கள் தேர்­தலில் வாக்­க­ளிக்க பதிவு!

(ரெ.கிறிஷ்­ணகாந்)

ஒரே தேசிய அடை­யாள அட்டை இலக்­கங்­களைக் கொண்ட பல வாக்­கா­ளர்கள் இம்­முறை தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்­காக பதிவு செய்­துள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

இதனை நிவர்த்தி செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு உரிய தரப்­பி­ன­ருக்கு அறி­வித்­துள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்­குழுத் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

இதன்­போது, எவ்­வாறு ஒரே அடை­யாள அட்டை இலக்­கங்கள் இரு­வ­ருக்குக் கிடைத்­தன என்­பது தொடர்பில் ஆணைக்­குழுத் தலைவர் விளக்­க­ம­ளித்­துள்ளார். அதற்­க­மைய தேசிய அடை­யாள அட்­டையில் கையெ­ழுத்து மூலம் எழுதும் நடை­முறை காணப்­பட்ட காலப்­ப­கு­தி­யி­லேயே இவ்­வா­றான தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், அவ்­வாறு ஒத்த இலக்கங்­களை கொண்ட 35 ஆயிரம் ஜோடி அடை­யாள அட்­டைகள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு ஒத்த அடை­யாள அட்டை இலக்­கங்­களைக் கொண்ட நபர்­க­ளி­டையே உறவு ரீதியில் எவ்­வித தொடர்­பு­களும் இல்­லை­யென்ற போதிலும், இவ்­வா­றாக ஒரே அடை­யாள அட்டை இலக்­கங்­களைக் கொண்ட ஜோடி­யினர் ஒரே தினத்தில் பிறந்­துள்­ள­வர்கள் என்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

அவ்­வாறே, இரட்டை வதி­வி­டப்­ப­தி­வு­களைக் கொண்ட சுமார் 6000 தேசிய அடையாள அட்டைகளையும் இம்முறை இனங்காண முடிந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

(Visited 47 times, 1 visits today)

Post Author: metro