மாங்­கு­ளத்தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கன­ரக வாக­னத்தின் மீது வேன் மோதி நால்வர் பலி

(கரைச்சி நிருபர்)

மாங்­குளம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொக்­காவில் ஏ9 பிர­தான வீதியில் இடம்­பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்­பட நால்வர் உயி­ரி­ழந்­துள்­ளனர். சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த ஒருவர் கிளி­நொச்சி பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.


பழு­த­டைந்த நிலையில் கொக்­காவில் ஏ9 பிர­தான வீதியில் நிறுத்தி வைக்­கப்­பட்ட கன­ரக வாகனம் ஒன்றின் மீது கொழும்­பி­லி­ருந்து யாழ் நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்த கயஸ் வேன் மோதியே குறித்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக மாங்­குளம் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.


இவ் விபத்தில் யாழ் வட­ம­ராட்­சியை சேர்ந்த சி.கிருஷ்­ண­ரூபன் (18), சி. சிந்­துஜன் (18), ப.அருண்(20), மா. காந்தன் (35) ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­ளனர். சட­லங்கள் கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 57 times, 1 visits today)

Post Author: metro