17 வய­தான மாணவ பிக்­குவை துஷ்­பி­ர­யோகம் செய்­தவர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்)

அநு­ரா­த­புரம் நகரில் பஸ்­ஸுக்­காக காத்­தி­ருந்த 17 வய­தான மாணவப் பிக்கு ஒரு­வரை பல­வந்­த­மாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோகம்  செய்­த­தாகக் கூறப்­படும் சந்­தேக நபரை எதிர்­வரும் 16 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அநு­ரா­த­புரம் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

அநு­ரா­த­புரம் தலைமை பொலிஸ் நிலை­யத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணி­யகத் தினரால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட சந்­தே­க­ந­பரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நேற்று அநு­ரா­த­புரம் பிர­தம நீதிவான் மற்றும் மேல­திக மாவட்ட நீதி­பதி ஹர்­ஷன கெகு­னு­வெல உத்­த­ர­விட்டார்.

அநு­ரா­த­புரம் கும்­பிச்­சங்­குளம் பிர­தே­சத்தைச் சேர்ந்த 52 வய­தான சந்­தேக நபரே இவ்­வாறு கைது­செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார்.
சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, குரு­ணாகல் பகு­தி­யி­லுள்ள பிரி­வெனா ஒன்றில் கல்­வி­கற்­று­வந்த 17 வய­தான குறித்த பிக்கு, விடு­மு­றையின் கார­ண­மாக கடந்த 5 ஆம் திகதி அநு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள தனது வீட்டை நோக்கி பய­ண­மா­கி­யுள்ளார்.

அநு­ரா­த­புரம் நக­ரத்­தி­லி­ருந்து தனது வீட்­டுக்கு செல்­ல­வேண்­டிய பஸ்­ஸுக்­காக இப்­பிக்கு அநு­ரா­த­புரம் பஸ்­த­ரிப்பில் காத்­தி­ருந்­த­போது, அவ்­வ­ழி­யாக வந்த சந்­தே­க­ந­ப­ரிடம் கழி­வறை எங்கு உள்­ளது என வின­வி­யுள்ளார். அதன்­போது, கழி­வ­றையைக் காட்­டு­வ­தாக பிக்­குவை, புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு திறக்­கப்­ப­டா­ம­லுள்ள பஸ் தரிப்பு நிலை­யத்தின் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று அவரைக் கடு­மை­யாக பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக சம்­பவம் தொடர்பில் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த அநு­ரா­த­புரம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் ஒருவர் மன்­றுக்கு தெரி­வித்­துள்ளார்.

அதன்­போது, வழக்கு தொடர்­பான அறிக்­கையை ஆராய்ந்த நீதிவான், துஷ்­பி­ரயோ கத்­துக்­குள்­ளான பிக்கு தொடர்­பான சட்­ட­வைத்­திய அறிக்­கையை மன்றில் சமர்ப்­பிக்­கு­மாறு அநு­ரா­த­புரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணி­ய­கத்­துக்கு உத்­த­ர­விட்டார்.

இச்­சம்­பவம் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணைகள் இன்னும் நிறை­வ­டை­யாத கார­ணத்­தினால் சந்­தேக நபரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு சார்ஜ்ண்ட் நந்­த­சேன நீதி­மன்­றைக்­கோ­ரி­யி­ருந்தார்.

இந்­நி­லையில், அநு­ரா­த­புரம் பொலிஸ் அத்­தி­யட்­சகர் திலினி ஹேவா­பத்­தி­ரண மற்றும் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சூலனி வீர­ரத்ன ஆகி­யோரின் உத்­த­ர­வுக்­க­மைய, அநு­ரா­த­புரம் சிறுவர் மற்றும் மகளிர் பணி­ய­கத்தின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் யமு­னாவின் தலை­மையில் சார்ஜண்ட் லலித் நந்­த­சேன சம்­பவம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தாக அநு­ரா­த­புரம் தலைமை அத்­தி­யட்­சகர் சூலனி வீரரத்ன ஆகியோரின் உத்தரவுக்கமைய, அநுராதபுரம் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யமுனாவின் தலைமையில் சார்ஜண்ட் லலித் நந்தசேன சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக அநுராதபுரம் தலைமை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

(Visited 69 times, 1 visits today)

Post Author: metro