வரலாற்றில் இன்று…
ஜனவரி – 10
1055 : கிழக்கு ரோமானிய இராஜ்ஜியமான பைசண்டைன் பேரரசியாக தியோடோரா முடி சூடினார்.
1569 : இங்கிலாந்தில் முதலாவது லொத்தர் சீட்டிழுப்பு பதிவாகியது.
1693 : சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பாரிய பூகம்பம், சிசிலி மற்றும் மோல்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.
1779 : மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
1782 : பிரித்தானியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலைமையில் திருகோணமலையைக் கைப்பற்றினர்.
1787 : யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1851 : சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
1861 : அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
1878 : முதற்தடவையாக போத்தலில் அடைத்து பால் விற்கப்பட்டது.
1922 : நீரிழிவுக்கு மருந்தாக இன்சுலின் மனிதரில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
1942 : இரண்டாம் உலகப் போரில் நெதர்லாந்துக்கு எதிராக ஜப்பான் போர் பிரகடனம் செய்தது.
1942 : இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
1943 : ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் சீனாவின் மீதான நில உரிமையை இழந்தன.
1946 : என்வர் ஹோக்ஸா அல்பேனியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.
1962 : பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
1972 : கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1998 : அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007 : செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.
2013 : இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2014 : ஹம்பாந்தோட்டையிலுள்ள மத்தள மஹிந்த ராஜபஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட துபாய் விமானமொன்று மயிலொன்றுடன் மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
2017 : மொரகஹகந்த நீர்த்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.
2017 : இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணைக்குழு பரிந்துரை செய்தது.