சர்­வ­தேச பனிச்­ச­றுக்கல் போட்­டியில் பதக்கம் வென்ற முதல் இந்­தியர்

சர்­வ­தேச பனிச்­ச­றுக்கல் போட்­டியில் பதக்கம் வென்ற முத­லா­வது இந்­தியர் என்ற பெரு­மையை 21 வய­தான யுவதி அன்ச்சல் தக்கூர் தன­தாக்­கிக்­கொண்டார்.


துருக்­கியில் நடை­பெற்ற அல்பைன் எஸ்டர் 3200 கிண்ண பனிச்­ச­றுக்கல் போட்­டியில் அன்ச்சல் தக்கூர் வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

இப் போட்டி சர்­வ­தேச பனிச்­ச­றுக்கல் (ஸ்கி) சம்­மே­ள­னத்­தினால் நடத்­தப்­பட்­டது. இந்­தி­யாவில் பனிப்­பொ­லிவு இடம்­பெ­று­வது அரிது என்­பதால் குளிர்­கால விளை­யாட்டுப் போட்­டிகள் பெரி­தாக கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

வெண்­கலப் பதக்கம் வென்ற அன்ச்­சலை முத­லா­வ­தாக பாராட்­டி­ய­வர்­களில் இந்­தியப் பிர­தமர் நரேந்த்ர மோடியும் ஒரு­வ­ராவார்.
செல்வி தக்­கூரின் இந்த வர­லாற்று சாத­னை­யை­யிட்டு பிர­தமர் மோடி தனது டுவிட்­டரில் ‘‘முழு தேசமும் பெரானந்தம் அடைகின்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.

(Visited 62 times, 1 visits today)

Post Author: metro