நீண்­ட­கால அடிப்­ப­டை­யி­லேயே மெத்யூஸ் அணித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார் – தெரிவுக் குழுத் தலைவர் லெப்ரோய்

(நெவில் அன்தனி)

உடற்­த­கு­தி­யுடன் திற­மையை வெளிப்­ப­டுத்­து­வ­ராக இருந்தால் ஏஞ்­சலோ மெத்­யூஸை அணித் தலை­வ­ராகக் கொண்­டி­ருப்போம் என இலங்கை அணித் தெரிவுக் குழுத் தலைவர் க்ரஹம் லெப்ரோய் தெரி­வித்தார்.


ஏஞ்­சலோ மெத்­யூஸை அணித் தலை­வ­ராக நிய­மிப்­ப­தற்கு திலங்க சும­தி­பால தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறை­வேற்றுக் குழு ஏக­ம­ன­தாகத் தெரிவு செய்­ததை அடுத்து இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்­கெட்­டுக்­கான இலங்கை அணியின் தலை­வ­ராக மெத்யூஸ் நேற்­று­முன்­தினம் மீண்டும் நிய­மிக்­கப்­பட்டார்.

அவ­ரது தலைமை எவ்­வ­ளவு காலம் தொடரும் என தெரிவுக் குழுத் தலைவர் க்ரஹம் லெப்­ரோ­யிடம் கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் தெரி­வித்தார்.

‘‘ஏஞ்­ச­லோவை நீண்­ட­காலத் திட்ட அடிப்­ப­டையில் அணித் தலை­வ­ராக நிய­மித்­துள்ளோம். அது 2019 உலகக் கிண்ணப் போட்­டிக்கு அப்­பாலும் செல்­லலாம். ஆனால் அவர் பங்­க­ளா­தேஷில் பந்­து­வீ­ச­மாட்டார். ஏனெனில் இப்­போ­துதான் அவர் உபா­தை­யி­லி­ருந்து மீண்டு வந்­துள்ளார். எதிர்­கா­லத்தில் அவர் பந்­து­வீ­சு­வாரா என்­பது பின்னர் தீர்­மா­னிக்­கப்­படும். அவர் திட­காத்­தி­ரத்­துடன் திற­மையை வெளிப்­ப­டுத்­தினால் அவரை தொடர்ந்தும் தலை­வ­ராகக் கொண்­டி­ருப்போம்’’ என லெப்ரோய் தெரி­வித்தார்.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக இந்­தூரில் கடந்த வருடம் நத்தார் பரு­வ­கா­லத்தில் நடை­பெற்ற இரண்­டா­வது சர்­வதேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­யின்­போது தனது 3ஆவது ஓவரின் 3ஆவது பந்தை வீச எத்­த­னித்­த­போது மெத்­யூஸின் தொடைப்­ப­கு­தியில் உபாதை ஏற்­பட்டு பந்­து­வீ­சு­வதை நிறுத்தி களம் விட்­ட­கன்றார். எவ்­வா­றா­யினும் கடந்த திங்­கட்­கி­ழமை உடற்­த­கு­தியில் அவர் தேறி­யதை அடுத்து அவரை சர்­வ­தேச ஒருநாள் மற்றம் இரு­பது 20 போட்­டி­க­ளுக்கு அணித் தலை­வ­ராக நிய­மிப்­ப­தென ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் தீர்­மா­னித்­தது.

தொடர்ச்­சி­யாக உபாதை அடை­வது குறித்து பேசிய மெத்யூஸ், ‘‘ஏன் இவ்­வாறு நடக்­கின்­றது, தொடர்ந்து நடக்­கின்­றது என்­பது குறித்து தெரி­வா­ளர்கள், புதிய பயிற்­றுநர், மருத்­துவக் குழு­வினர் ஆகி­யோ­ருடன் பல தட­வைகள் கலந்­து­ரை­யா­டினோம். 2013 முதல் 2016வரை­யான கால்­ப­கு­தியில் ஒரு போட்­டியைத் தானும் விடாமல் மூவகை சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் உல­கி­லேயே நான் மாத்­தி­ரமே அதி­க­ள­வி­லான போட்­டி­களில் பங்­கு­பற்­றி­ய­மையே இப்­போது தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது என மருத்­துவ நிபு­ணர்கள் கூறினர்.

‘‘இதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வதற்­கான திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது. இப்­போ­தைக்கு டெஸ்ட் போட்­டி­களில் பந்­து­வீ­சு­வதை நிறுத்­தி­யுள்ளேன். சர்­வ­தேச ஒருநாள் மற்றும் சர்­வ­தேச இரு­பது 20 போட்­டி­களில் சில ஓவர்கள் பந்­து­வீ­சினால் நல­மாக இருக்கும்.

ஆனால், இப்­போ­தைக்கு அதனைத் தவிர்ப்­பது நல்­லது. இதனைக் கட்­டுப்­ப­டுத்தஅனைத்­து­வ­கை­யான முயற்­சி­க­ளையும் எடுப்போம். எனினும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக எல்லை மீறி­வி­டு­கின்­றது.

என்னாலான சிறந்­த­வற்றை நான் செய்­கின்றேன். நிபு­ணர்­க­ளி­ட­மி­ருந்து எல்லா ஆலோ­ச­னை­க­ளையும் பின்­பற்­று­கின்றேன். ஆனால் உபா­தைக்­குள்­ளானால் அது துர­திர்ஷ்டம்’’ என்றார் மெத்யூஸ்.

இதே­வேளை, புதிய பயிற்­று­நரின் வருகை இலங்கை அணிக்கு அதிர்ஷ்­டத்தைக் கொடுக்கும் என நம்­பு­வ­தாக மெத்யூஸ் குறிப்­பிட்டார்.

‘‘தற்­போ­தைய நிலையில் புதிய பயிற்­று­நரின் வருகை வீரர்­களின் தங்­கு­ம­றையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும். வீரர்­க­ளுக்கு சுதந்­திரம் வழங்­கினால் உட­ன­டி­யா­கவே அவர்கள் உறு­தி­யு­டனும் தெளி­வு­டனும் செயற்­பட ஆரம்­பிப்பர் என நான் நம்­பு­கின்றேன். எம்­மிடம் ஆற்­றலும் திறனும் இருக்­கின்­றது. எம்மால் சாதிக்க முடியும். சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப எம்மை மாற்­றிக்­கொண்டு விளை­யா­டினால் எல்லாம் சிறப்­பாக அமையும்’’ என அவர் தெரி­வித்தார். இது இவ்­வா­றி­ருக்க, ஒவ்­வொரு போட்­டி­யிலும் வெற்­றி­பெ­று­வதே எமது நோக்கம் என பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க தெரி­வித்தார்.

‘‘ஒவ்­வொரு போட்­டி­யிலும் வெற்­றி­பெ­று­வதே எமது நோக்கம். ஆனால் முன்­னேற்றப் பாதையில் செல்­வதே எனது குறிக்கோள். நாம் முன்­னே­றினால் சகல அணி­க­ளுக்கும் சவால் விடுக்­கக்­ கூ­டி­ய­தாக இருக்கும் என நம்­பு­கின்றேன்’’ என்றார் ஹத்­து­ரு­சிங்க.
பங்­க­ளாதேஷ் அணியை எதிர்த்­தா­டும்­போது அழுத்தம் ஏற்­ப­டுமா? என எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்த ஹத்­து­ரு­சிங்க, ‘‘அழுத்தம் என்றால் என்ன? அதற்கு நிறம் இருக்கின்றதா? என பதில் கேள்வி தொடுத்ததுடன் அப்படி எல்லாம் எதுவுமில்லை என்றார்.

‘பங்களாதேஷைப் பொறுத்தமட்டில் கடந்த இரண்டு வருடங்களில் பலம் வாய்ந்த அணியாக விளங்குகின்றனர். ஒரு தொடரில் மாத்திரமே நாங்கள் (பங்களாதேஷ் பயிற்றுநராக இருந்தபோது) தோல்வி அடைந்தோம். சொந்த நாட்டு நிலைமைகளை அவர்கள் நன்கு அறிந்துள்ளதால் இது எமக்கு (இலங்கைக்கு) பெரும் சவாலாக அமையும்’’ என ஹத்துருசிங்க குறிப்பிட்டார்.

(Visited 55 times, 1 visits today)

Post Author: metro