பெண்களுக்கு மதுபானம் விற்பதற்கும் மதுபானம் சார்ந்த துறைகளில் பெண்கள் பணியாற்றவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

காய்ச்சி வடிக்கும் தொழிற்­சாலை மற்றும் மது­பான விற்­பனை நிலை­யங்­களில் மது­பா­னங்­களை விற்றல், விலைக்கு வாங்­குதல் மற்றும் அவற்றில் பணி­யாற்­றுதல் ஆகி­யன தொடர்பில் பெண்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை நீக்­கப்­பட்­டுள்­ள­தாக நிதி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலில் நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர கையொப்­ப­மிட்­டுள்­ள­தாக நிதி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்தத் தடை நீக்­கத்தின் மூலம் 18 வய­துக்கு மேற்­பட்ட பெண்கள் மாத்­திரம் இவ்­வாறு மது­பா­னம்சார் தொழில்­களில் பணி­யாற்ற அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்­ன­தாக பெண்கள், காய்ச்சி வடிக்கும் தொழிற்­சாலை மற்றும் மது­பான விற்­பனை நிலை­யங்­களில் மது­பா­னங்­களை விற்றல், விலைக்கு வாங்­குதல் மற்றும் அவற்றில் பணி­யாற்­றுதல் என்­ப­வற்றை செய்­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலுக்கு வந்ததன் பின்னர் இந்தத் தடை நீக்கம் பெறும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

(Visited 70 times, 1 visits today)

Post Author: metro