பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இயக்குநரின் படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு: சம்பளம் முழுவதையும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான அமைப்புக்கு நன்கொடையாக வழங்கும் நட்சத்திரங்கள்

அமெ­ரிக்­காவின் பிர­பல பாட­கியும் நடி­கை­யு­மான செலீனா கோமஸ், தான் நடிக்கும் புதிய பட­மொன்றின் சம்­பளத் தொகை­யை­விட அதி­க­மான தொகையை, பாலியல் தொந்­த­ர­வு­களால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உத­வு­வ­தற்­கான நிதி­யத்­துக்கு நன்­கொ­டை­யாக அளித்­துள்ளார் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

ஹொலி­வூட்டின் பிர­பல இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ரான வூடி அலெனின் A Rainy Day in New York (ஏ ரெய்னி டே இன் நியூ யோர்க்) எனும் படத்தில் கதா­நா­ய­கி­யாக நடித்து வரு­கிறார். இப்­ப­டத்தில் கதா­நா­ய­கி­யாக திமோதி சாலமெட் நடிக்­கிறார்.

இப்­ப­டத்தின் இயக்­கு­ந­ரான வூடி அலென் 82 வய­தா­னவர். ஐம்­ப­துக்கும் அதி­க­மான திரைப்­ப­டங்­களை இயக்­கி­யவர். நான்கு ஒஸ்கார் விரு­து­க­ளையும் வென்­றவர்.

ஆனால், அவர் மீது நீண்­ட­கா­ல­மாக பாலியல் குற்­றச்­சாட்­டுகள் உள்­ளன. வூடி அலெனின் வளர்ப்பு மக­ளான டைலான் ஃபெரோ, 1992 ஆம் ஆண்டில் தான் 7 வயது சிறு­மி­யாக இருந்­த­போது தன்னை வூடி அலென் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக தெரி­வித்­தி­ருந்தார். இக்­குற்­றச்­சாட்­டு­களை அவர் நிரா­க­ரித்து வரு­கிறார்.

ஹொலி­வூட்டில் ஆண்­களால் தாம் எதிர்­கொண்ட பாலியல் வன்­மு­றைகள், தொந்­த­ர­வுகள் குறித்து நடி­கைகள் மற்றும் பெண்கள் பலர் வெளிப்­ப­டை­யாக பேசி வரும் நிலையில் வூடி அலன் மீதான குற்­றச்­சாட்டும் மீண்டும் வெளிக்­கி­ளம்­பி­யுள்­ளது. தான் கூறு­வது உண்மை என டைலான் ஃபெரோ தெரி­வித்­துள்ளார்.

இதனால், வூடி அலெனின் திரைப்­ப­டங்­களில் தாம் பணி­யாற்­றி­யமை குறித்து வருந்­து­வ­தாக நடி­கைகள் மிரா சோர்­வினோ கிரேட்டா, கேர்விக், ரெபேக்கா ஹால ஆகியோர் தெரி­வித்­துள்­ளனர்.

நடிகை ரெபோக்­காவும் தற்­போது செலீ­னா­வுடன் ”ஏ ரெய்னி டே இன் நியூ யோர்க்” படத்தில் நடிக்கும் நடிகர் திமோத்தி சால­மென்டும் வூடி அலெனின் படங்­களில் தாம் சம்­பா­தித்த பணம் முழு­வ­தையும், பாலியல் தொந்­த­ர­வு­களால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உத­வு­வ­தற்­கான டைம்ஸ் அப் (Time’s Up) நிதி­யத்­துக்கு நன்­கொ­டை­யாக வழங்குவ­தாக அறி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை, நடிகை செலீனா கோமஸும் வூடி அலெனின் ”ஏ ரெய்னி டே இன் நியூ யோர்க்” படத்தில் நடிப்­ப­தற்கு எதி­ராக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. செலீனா கோமஸ் மன்­னிப்பு கோர வேண்டும் எனவும் சிலர் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

படப்பிடிப்புத் தளத்தில் திமோத்தி சாலமென், செலீனா கோமஸ், இயக்குநர் வூடி அலென்

………………………………………………….

இந்­நி­லையில், ‘டைம்ஸ் அப்” அமைப்­புக்கு பெருந்­தொகை நிதியை நன்­கொ­டை­யாக செலீனா வழங்­கி­யுள்ளார் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. இத்­தொ­கை­யா­னது மேற்­படி படத்தில் நடிப்­ப­தற்­காக செலீ­னா­வுக்கு வழங்கப்படும் சம்பளத்தைவிட அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வூடி அலெனின் படத்தில் பணியாற்றுவது குறித்து செலீனாவை தான் எச்சரித்திருந்ததாக செலீனா கோமஸின் தாயார் மெண்டி டீஃபே பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

 

(Visited 63 times, 1 visits today)

Post Author: metro