சவூதி அரேபியாவில் முதல் தடவையாக பெண்களுக்கு மாத்திரமான கார் காட்சியறை

சவூதி அரே­பி­யாவில் பெண்­க­ளுக்கு மாத்­தி­ர­மான கார் காட்­சி­யறை கடந்த வாரம் திறக்­கப்­பட்­டது. பெண்கள் வாகனம் செலுத்­து­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்க மறுக்கும் ஒரே நாடாக சவூதி அரே­பியா உள்­ளது. எனினும், எதிர்­வரும் ஜூன் மாதம் முதல் பெண்கள் வாகனம் செலுத்த அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள் என கடந்த வருடம் சவூதி மன்னர் சல்மான் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த அறி­விப்பை விடுத்தார்.


32 வய­தான முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹம்மத் பின் சல்மான் இத்­த­கைய மாற்­றங்­க­ளுக்கு உந்­து­தலாக உள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மேற்­படி தீர்­மானம் அமு­லுக்கு வரு­வ­தற்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், பெண்­க­ளுக்கு மாத்­தி­ர­மான முத­லா­வது வாகன காட்­சி­ய­றையை சவூதி அரே­பி­யா­வி­லுள்ள தனியார் நிறு­வ­ன­மொன்று கடந்த 11 ஆம் திகதி திறந்­துள்­ளது.


சவூதி அரே­பி­யாவின் மேற்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள செங்­கடல் துறை­முக நக­ரான ஜெத்­தாவில் இக்­காட்­சியறை உள்­ளது. இக்­காட்­சி­ய­றையில் அதி ஆடம்­பர கார்கள் உட்­பட பல்­வேறு வகை­யான கார்கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு பெண் ஊழி­யர்க்ள மாத்­திமே பணி­யாற்­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. வாக­னங்­களை வாங்கு­வ­தற்கு வங்­கிகள் மற்றும் நிதி நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து நிதி உத­வி­களைப் பெறு­வ­தற்­கான வச­தி­க­ளையும் மேற்­படி காட்­சி­ய­றை ஏற்­பாடு செய்­துள்­ளது. சவூதி அரே­பி­யாவின் மேலும் பல நக­ரங்­க­ளிலும் பெண்­க­ளுக்கு மாத்­தி­ர­மான வாகனக் காட்­சி­ய­றை­களை திறப்­ப­தற்கு திட்­ட­மிடப்பட்டுள்­ள­தா­கவும் அந்­நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.


இக்­காட்­சி­ய­றைக்கு வந்த வாடிக்­கை­யா­ள­ரான பெண்­ணொ­ருவர் இது தொடர்­பாக கூறுகையில், கார்கள் மீது எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்தது. ஆனால், வாகனங்களை செலுத்துவதற்கான ஆற்றல் எம்மிடம் இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

(Visited 194 times, 1 visits today)

Post Author: metro