எம்.ஜி.ஆர். நடிக்கும் புதிய படம்; ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படப்பிடிப்பை ரஜினி, கமல் தொடக்கி வைத்தனர்

புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எனப் போற்­றப்­படும் தமி­ழக முன்னாள் முத­ல­மைச்சர் எம்.­ஜி.ஆர். (எம்.ஜி.ராமச்­சந்­திரன்) மறைந்த பிறகும் கதா­நா­ய­க­னாகத் தோன்றும் புதிய படம் “கிழக்கு ஆப்­பிரிக்­காவில் ராஜு”

இந்தப் படத்தின் படப்­பி­டிப்பை சுப்பர் ஸ்டார் ரஜி­னிகாந்த், உலக நாயகன் கமல்­ஹாசன் ஆகியோர் இணைந்து நேற்­று­முன்­தினம் தொடக்கி வைத்­தனர்.

1973 ஆம் ஆண்டு எம்­.ஜி.ஆர். கதா­நா­ய­க­னாக நடித்து அவரே இய க்கி வெளி­யான “உலகம் சுற்றும் வாலி பன்” திரைப்­படம் மாபெரும் வெற்­றி யைப் பெற்­றது.

அப்­ப­டத்தின் தொடர்ச்­சி­யாக “கிழக்கு ஆப்­பி­ரிக்­காவில் ராஜூ” என்ற இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்­ததும், இதன் தொடர்ச்­சி­யாக கிழக்கு ஆப்­ரிக்­காவில் ராஜு என்ற பிர­மாண்ட படத்தை எடுக்கப் போவ­தாக எம்.­ஜி.ஆர். அறி­விப்பு வெளி­யிட்­டி­ருந்தார். ஆனால் பல்­வேறு கார­ணங்­களால் அந்த முயற்சி நடக்­க­வில்லை. 1977 ஆம் ஆண்டு எம்.­ஜி.ஆர். தமிழக முதல்­வ­ரா­கி­விட்­டதால் படம் இயக்கும் எண்­ணத்­தையும் கைவிட்­டு­விட்டார்.

இந்­நி­லையில், எம்.­ஜி.ஆரால் இந்தப் படம் அறி­விக்­கப்­பட்டு 45 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு இப்­போது மீண்டும் பட­மா­கி­றது. இந்தப் படத்தில் மறைந்த எம்.­ஜி­.ஆரே நாய­க­னாக நடிக்­கிறார். எப்­ப­டி­யெனில், அமெ­ரிக்­காவில் எனி­மேஷன் தொழில் நுட்­பத்தின் மூலம் எம்.ஜி.ஆரையே நடிக்க வைப்­ப­து­போல, இந்த படம் தயா­ரிக்­கப்­பட இருக்­கி­றது.

வேல்ஸ் பல்­க­லைக்­க­ழக வேந்­தரும், மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மக­னு­மான ஐசரி கணேஷ் மற்றும் பிர­பு­தேவா இணைந்து தயா­ரிக்­க­வுள்­ளனர்.

இந்த படத்தின் கதா­நா­யகி யார்? என்­பது குறித்து அடுத்த ஒரு­மா­தத்தில் ஐசரி கணேஷ் அறி­விக்க இருக்­கிறார். இந்த படத்தில் நகைச்­சுவை பாத்­தி­ரத்தில் ஐசரி கணேஷின் தந்­தையும், எம்.ஜி.ஆர். நடித்த பல படங்­களில் நகைச்­சுவை வேடத்தில் நடித்­த­வ­ரு­மான மறைந்த ஐசரி வேலன் தோன்­று­கிறார்.

இந்தப் படத்தின் கதை, திரைக்­கதை, இயக்கம் பொறுப்பை எம். அருள்­மூர்த்தி ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கிறார். கவிஞர் வைர­முத்து பாடல்கள் எழு­து­கிறார். டி இமான் இசை­ய­மைக்­கிறார்.

இப்­ப­டத்தின் படப்­பி­டிப்பு எம்.ஜி.ஆரின் 101ஆவது பிறந்த தின­மான நேற்று முன்­தினம் 17 ஆம் திகதி சென்­னையில் நடை­பெற்­றது. இவ்­வி­ழாவில், நடிகர் ரஜி­னிகாந்த் கிளாப் அடித்து படப்­பி­டிப்பை தொடங்கி வைத்தார். கிழக்கு ஆப்­பி­ரிக்­காவில் ராஜூ திரைப்­படம் குறித்த அறி­முக வீடி­யோவை நடிகர் கம­ல்ஹாசன், வெளி­யிட்டார். இந்­திய மத்­திய அமைச்சர் பொன் ராதா­கி­ருஷ்ணன், தமி­ழக அமைச்­சர்கள் உடு­மலை ராதா­கி­ருஷ்ணன், கடம்பூர் ராஜூ, நடி­கைகள் லதா, சௌகார் ஜானகி, சச்சு, குட்டி பத்­மினி, அம்­பிகா உள்­ளிட்டோர் இவ்­வி­ழாவில் பங்­கேற்­றனர்.

எம்.ஜி.ஆரின் 102 ஆவது பிறந்த நாளான 2019 ஜன­வரி 17 ஆம் திகதி இந்த படம் உலகம் முழு­வ­திலும் வெளி­யி­டப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து ஐசரி கணேஷ், கூறும்­போது, ‘என் தந்தை ஐசரி வேலன் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்­டவர். என் தந்­தையும், எம்.ஜி.ஆரைத்தான் தனக்கு எல்லாம் என்று நினைத்து வாழ்ந்­தவர். அப்­ப­டிப்­பட்ட புரட்­சித்­த­லைவர் கனவு நன­வா­காமல் போய்­வி­டக்­கூ­டாது என்ற வகையில், அதை நன­வாக்கும் வகையில் ‘கிழக்கு ஆப்­பி­ரிக்­காவில் ராஜூ’ படத்தை நான் தயாரிக்கிறேன். அனிமேஷன் தொழில் நுட்பத்தில் இந்தப் படம் தயாராகிறது. இது தமிழ் திரைப்பட வரலாற்றில் யாரும் தயாரிக்காத ஒரு முயற்சியாகும். இந்தப் படம் நிச்சயமாக பார்ப் பவர் களை பிரமிக்கச்செய்யும்” என்றார்.

(Visited 94 times, 1 visits today)

Post Author: metro