படத்தில் நடிப்பதற்காக 5 பேருடன் என்னை பகிர்ந்துகொள்ளப் போவதாக தயாரிப்பாளர் கூறினார்: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவிப்பு

திரைப்­ப­ட­மொன்றில் கதா­நா­ய­கி­யாக நடிப்­ப­தற்­காக தன்னை அப்­ப­டத்தின் தயா­ரிப்­பா­ளர்கள் ஐவ­ருடன் பகிர்ந்து கொள்ள ஒத்­து­ழைக்க வேண்டும் என தமிழ்த் திரைப்­பட தயா­ரிப்­பாளர் ஒருவர் கூறி­ய­தாக நடிகை ஸ்ருதி ஹரி­ஹரன் தெரி­வித்­துள்ளார்.

கன்­ன­டத்தில் லூசியா என்ற படம் மூலம் அதிக புகழ்­பெற்­றவர் நடிகை ஸ்ருதி ஹரி­ஹரன் (29). இந்தப் படம் தமிழில் சித்தார்த் நடிப்பில் ‘எனக்குள் ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி­யி­ருந்­தது. ஸ்ருதி தமிழில், நெருங்கி வா முத்­த­மி­டாதே, நிபுணன், சோலோ ஆகிய படங்­களில் நடித்­துள்ளார்.

 


தி சௌத் இந்­தியன் கொன்­கி­ளேவ 2018 நிகழ்ச்சி, ஹைத­ரா­பாத்தில் நடந்­தது. கடந்த வியா­ழக்­
கி­ழமை முதல் நாள் நிகழ்வில், செக்­ஸிசம் இன் சினிமா என்ற தலைப்பில் நடந்த கருத்­த­ரங்கில் படத்­தொ­குப்­பாளர் பீனா பால், நடி­கைகள் பிர­ணித சுபாஷ் மற்றும் ஸ்ருதி ஹரி­ஹரன் ஆகியோர் கலந்­து­கொண்டு பேசினர்.

அப்­போது பேசிய ஸ்ருதி ஹரி­ஹரன், 18 வயதில் நான் எனது முதல் கன்­னடப் படத்தில் நடித்­த­போது, பாலியல் தொந்­த­ர­வுக்கு ஆளானேன். அந்த நிகழ்வு, என்னுள் பெரிய வடுவாய் மாறிப்­போ­னது. அங்கு நடந்­தது குறித்து எனது நடன இயக்­கு­ந­ரிடம் கூறி­ய­போது, இது­போன்ற சூழ்­நி­லை­களைக் கையாள்­வது எப்­படி என்­பது தெரி­யா­விட்டால், சினி­மாத்­து­றையை விட்டே வெளியே­றி­விடு என்றார்.இறு­தியில் அப்­ப­டத்தில் நான் நடிக்­க­வில்லை.

அந்தச் சம்­பவம் நடந்து 4 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு, வேறு ஒரு சம்­பவம் நடந்­தது. எனது கன்­னடப் படம் ஒன்றின் ரீமேக் உரி­மையைத் தமிழ்த் திரைப்படத் தயா­ரிப்­பாளர் ஒருவர் வாங்­கி­யி­ருந்தார். கன்­ன­டத்தில் நான் நடித்­தி­ருந்த அதே கதா­பாத்­தி­ரத்தில் தமி­ழிலும் எனக்குத் தரு­வ­தற்கு அவர் முன்­வந்தார். ஆனால், நாம் தயா­ரிப்­பா­ளர்கள் ஐந்து பேர் இருக்­கிறோம். உங்­களை எப்­படி வேண்­டு­மா­னாலும் நாம் பகிர்­ந்து கொள்வோம் என அவர் என்­னிடம் தெரி­வித்தார்.

அப்­போது நான் செருப்­பொன்றை கையில் வைத்­துக்­கொண்டு நடப்­பவள் என பதி­லடி கொடுத்தேன். அதன் பின்னர் நான் இணைந்து பணி­யாற்­ற­வ­தற்கு கடி­ன­மான ஒருவர் என வதந்­திகள் ெவளிவந்த பின் இத்­து­றையில் பணி­யாற்­று­வது சிர­ம­மாக இருந்­தது. இந்­ந­பரை அறிந்த தயா­ரிப்­பா­ளர்கள் பலர், நான் உண்­மை­யி­லேயே அவ்­வாறு கூறி­னேனா எனக் கேட்­டனர். அப்­போ­தி­ருந்து, என்னால் தமிழில் நல்ல படங்கள் எனக்குக் கிடைக்­க­வில்லை என்றார்.

படுக்­கையை பகிர்ந்­து­கொள்ளும் முறையை ஒழிக்க ஒன்­று­பட்டு குரல் கொடுப்போம்

இதே­வேளை, திரைப்­ப­டத்­து­றையில் உள்ள பாலியல் தொந்­த­ரவு தொடர்­பாக அவர் அறிக்கை ஒன்றை ெவளியிட்­டி­ருக்­கிறார். அதில் அவர் தெரி­வி­த்­துள்ளதாவது;

அண்­மையில் நடந்த ஒரு கருத்­த­ரங்கில் திரைத்­து­றையில் படுக்­கையை பகிரும் நிர்ப்­பந்தம் குறித்து நான் கூறி­யது எல்லாம் உண்­மையே. அதே­வே­ளையில் இதை தவிர்க்­கவே முடி­யாது என்று நான் சொல்ல மாட்டேன். இப்­படி ஒரு நிர்ப்­பந்தம் திரைத்­து­றையில் இருக்­கி­றது என நான் கூறு­வதால் திரைத்­துறை குறித்து தவ­றான பிம்­பத்தை உரு­வாக்க முய­ல­வில்லை.

உண்­மையில் திரைத்­துறை மிகவும் அற்­பு­த­மா­னது. எனது திற­மைக்கு தீனி போடும் துறை. நான் இத்­து­றையை நேசிக்­கிறேன். எனது திற­மைக்கு ரசி­கர்கள் கொடுக்கும் ஆத­ர­வையும் அன்­பையும் கண்டு ஆசிர்­வ­திக்­கப்­பட்­ட­வளாய் உணர்­கிறேன். எனது குடும்­பமும் எனது வளர்ச்­சியில் பெரு­மிதம் கொண்­டுள்­ளது.

இப்­போது விஷ­யத்­துக்கு வரு­கிறேன். படுக்­கையை பகிரும் நிர்ப்­பந்­தத்­துக்கு என்­னைப்போல் நிறைய நடி­கைகள் பழி­யா­கி­யி­ருக்­கின்­றனர். அதே வேளையில் துணி­வுடன் முடி­யாது என்று சொல்­ப­வர்­க­ளையும் எனக்குத் தெரியும். ஒரு பட வாய்ப்பு கையை­விட்டுப் போகும் எனத் தெரிந்தும் முடி­யாது என்று சொல்­வது மிகப்­பெ­ரிய விஷயம்.

படுக்­கையைப் பகிரும் நிர்ப்­பந்­தத்­துக்கு அடி­ப­ணி­வதால் முதல் வாய்ப்பை வேண்­டு­மானால் பெற முடியும். ஆனால், துறையில் நிலைத்து நிற்க வேண்­டு­மானால் அதற்கு திறமை வேண்டும். தொழில்­ரீ­தி­யாக நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும். இனி, நாம் எந்த சம­ர­சமும் செய்து கொள்ளக் கூடாது.

காலம் மாறி வரு­கி­றது. திரைத்­து­றையில் சில உன்­னத மனி­தர்­களும் இருக்­கின்­றனர். அவர்கள் மீது நான் மிகுந்த மரி­யாதை கொண்­டி­ருக்­கிறேன். அத்­த­கைய நபர்­க­ளோடு பணி­யாற்ற காத்­தி­ருக்­கிறேன். எனவே, திரைத்­து­றையில் ஒட்­டு­மொத்த ஆண்­க­ளையும் நாம் குற்றம் கூறக்­கூ­டாது. ஒரு சிலர் நடி­கை­க­ளிடம் பாலு­றவை எதிர்­பார்க்­கின்­றனர் என்றால் அவர்­க­ளுக்கு சில பெண்கள் ஒத்­து­ழைத்­தி­ருக்க வேண்டும். அதனால், எல்­லோரும் அப்­படி ஒத்­து­ழைப்­பார்கள் என்றே அவர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். இரு கைகள் இணைந்­தால்­தானே ஓசை வரும்.

இது 2018 ஆம் ஆண்டு. இப்­போது திரைத்­து­றைக்கு நிறைய நடி­கைகள் வந்­து­விட்­டனர். அவர்­களில் பலரும் வெற்றி நாய­கி­க­ளாக உள்­ளனர். அதுவும், யாரு­டைய நிர்­ப்பந்­தத்­துக்­கா­கவும் படுக்­கையை பகிர்ந்து கொள்­ளா­ம­லேயே தங்­களை நிறு­வி­யுள்­ளனர். அப்­ப­டிப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ரையும் நினைத்து நான் பெரு­மிதம் கொள்­கிறேன். படுக்­கையைப் பகிர்ந்து கொள்ளும் முறை அழிக்­கப்­பட வேண்­டி­யது. அதற்கு திரைத்­து­றையில் உள்ள பெண்கள் அனை­வரும் ஒன்­று­பட்டு குரல் கொடுக்க வேண்டும்.

முடி­யாது என்று சொல்லும் தைரியம் வேண்டும். படுக்­கையைப் பகிர்­த­லுக்கு மட்­டு­மல்ல வேறு எந்த மாதி­ரி­யான பாலியல் சீண்­ட­லுக்கும் பெண்ணின் மாண்பை குறைக்கும் எவ்­வித செய­லுக்கும் முடி­யாது என நாம் உரக்கச் சொல்ல வேண்டும்.

அப்­படிச் செய்தால் மட்­டுமே, இனி ஓர் இளம்பெண் சினிமா கனவை அவள் வீட்டில் தெரி­விக்­கும்­போது, உனக்கு என்ன பைத்தியமா? சினிமா துறை எவ்வளவு அழுக்கானது தெரியுமா? உன் குடும்பத்துக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. ஒழுங்கா போய் படித்து ஏதாவது உருப்படியாக செய் என்ற பதில் பெற்றோர், குடும்பத்தினரிடம் இருந்து வராமல் இருக்கும்.

இது தனி ஒருவரால் செய்து முடிக்கக்கூடிய விஷயம் இல்லை. எனவே, பெண்கள் மட்டுமல்ல நல்லுள்ளம் கொண்ட ஆண்களும் குரல் கொடுக்க வேண்டும். ஆணாதிக்கம் ஒழிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.

(Visited 234 times, 1 visits today)

Post Author: metro