ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: கடற்படை புலனாய்வுப் பிரிவின் எம்.சி.பி.ஓ தர அதிகாரி கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்திக் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் மற்­றொரு பிர­தான சந்­தேக நபரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­தனர். எம்.சி.பி.ஓ. (Master chief petty officer) தர அதி­கா­ரி­யான மாத்­த­ளையை வதி­வி­ட­மாகக் கொண்ட அருண துஷார மெண்டிஸ் என்­ப­வரே குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டார்.

குறித்த விசா­ரணைப் பிரி­வுக்கு விசா­ர­ணை­க­ளுக்­காக அழைக்­கப்­பட்ட அவர் விசா­ர­ணை­களின் இடை­ந­டுவே அப்­பி­ரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா தலை­மை­யி­லான குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்டு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார். இதன்­போது அவரை எதிர்­வரும் 25 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் லங்கா ஜய­ரத்ன உத்­த­ர­விட்டார்.

கைது செய்­யப்­பட்ட கடற்­படை அதி­காரி, கடற்­ப­டையின் விசேட புல­னாய்வுப் பிரிவில் இவ்­வி­வ­கா­ரத்தின் 2 ஆம் சந்­தேக நப­ரான கொமாண்டர் ரண­சிங்­கவின் கீழ் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை சேவை செய்­துள்ளார்.

இந்­நி­லையில் அவர் கடத்தல், கொல்­லப்­ப­டு­வோரின் சட­லங்­களை அழிப்­பது போன்ற செயல்­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் எனக் கூறும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் அது தொடர்பில் கிடைக்கப் பெற்ற சாட்­சி­யங்­களின் பிர­காரம் சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­ட­தாக தெரி­வித்தார்.

(Visited 19 times, 1 visits today)

Post Author: metro