12 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை

(இரோஷா வேலு)

பூந­கரி – நாச்­சிக்­குடா பகு­தியில் 12 வயது சிறு­மியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­ட­த­னை­ய­டுத்து அவ­ருக்கு 10 ஆண்­டுகள் கடூ­ழியச் சிறைத் தண்­டனை வழங்கி யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் நேற்று முன்­தினம் தீர்ப்­ப­ளித்தார்.

2010 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி பூந­கரி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாச்­சிக்­குடா பகு­தியில் வைத்து 12 வயது சிறு­மியை கடத்திச் சென்று துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் சிறு­மி வழங்­கிய வாக்­கு ­மூ­லத்தின் அடிப்­ப­டையில், பாதிக்­கப்­பட்ட சிறு­மியின் உற­வி­ன­ரான குடும்­பஸ்தர் ஒருவர் கைது செய்­யப்­பட்டார்.

இது தொடர்­பான ஆரம்ப விசா­ர­ணைகள் கிளி­நொச்சி நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற நிலையில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் வழக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன்­போது சந்­தே­க­ந­பரும் பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.

இந்­நி­லையில், பெற்­றோரின் பாது­காப்­பி­லி­ருந்து கடத்திச் சென்­றமை மற்றும் 16 வய­துக்கு உட்­பட்ட சிறு­மியை வன்­பு­ணர்ந்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ், சந்­தே­க­ந­ப­ருக்கு எதி­ராக, சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தால் யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது.

அதன்­படி, இவ்­வ­ழக்கு நேற்று யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. இதன்­போதே எதிரி தன் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும், மது­போ­தையில் அவ்­வாறு நடந்து கொண்­ட­மைக்கு இப்­போது அவர் வருத்­தப்­ப­டு­வ­தா­கவும் குற்­ற­வா­ளி­யாக அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நபர் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து, பெற்­றோரின் பாது­காப்­பி­லி­ருந்து சிறு­மியைக் கடத்திச் சென்­ற­மைக்கு இரண்டு ஆண்­டுகள் கடூ­ழியச் சிறைத் தண்­ட­னையும் அத்­துடன், 5 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அதனைச் செலுத்தத் தவறின் இன்னும் இரண்டு மாதங்கள் சிறைத் தண்­ட­னையும் இரண்­டா­வது குற்­றச்­செ­ய­லான சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­மைக்­காக 10 ஆண்­டுகள் கடூ­ழியச் சிறைத் தண்­ட­னையும் ஐயா­யிரம் ரூபா தண்­டப் ­ப­ணமும் அதனை செலுத்த தவறின் மேல­தி­க­மாக 3 மாதங்கள் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்டுமென்பதுடன் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு நஷ்டஈடாக இரண்டு இலட்சம் ரூபா வழங்குவதோடு எதிரி இரண்டு வகை சிறைத் தண்டனை களையும் ஏக காலத்தில் அனுப விக்க வேண்டும் என்றும் நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

(Visited 52 times, 1 visits today)

Post Author: metro