ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை சிப்பிகள்!

(ரெ.கிறிஷ்­ணகாந்)

ஹம்­பாந்­தோட்டை வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரி­களால் தங்­காலை நகரை அண்­மித்த பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பின்­போது அனு­ம­தி­யின்றி ஒரு தொகை சிப்­பி­களை வைத்­தி­ருந்த சந்­தேக நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.


ஹம்­பாந்­தோட்டை வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரி­க­ளுக்கு கிடைத்த தக­வ­லுக்­க­மைய நேற்று முன்­தினம் மாலை மேற்­கொள்­ளப்­பட்ட இந்த சுற்­றி­வ­ளைப்­பின்­போது, குறித்த சந்­தேக நபரின் வீட்­டினுள் இருந்து, சொந்­த­மாக வைத்­தி­ருப்­ப­தற்கு அனு­ம­தி­யில்­லாத வெவ்­வேறு வகை­யான ஒரு தொகை சிப்­பி­களை வன­ஜீ­வ­ரா­சிகள் அலு­வ­லக அதி­கா­ரிகள் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இவ்­வாறு கைப்­பற்­றப்­பட்ட சிப்­பி­களுள் லங்கா சிப்பி, சிக்ஸ் பிங்கர்ஸ், சங்கு சிப்­பிகள் உள்­ளிட்ட சிப்­பிகள் அடங்­கு­வ­தாக வன­ஜீ­வ­ரா­சிகள் அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். கைப்­பற்­றப்­பட்­டுள்ள இந்த சிப்­பிகள் இலங்­கைக்கு உரித்­தா­னவை என்றும் அவை தலா 1500 ரூபா முதல் 6000 ரூபா வரை­யான விலை­களில் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.


கைப்­பற்­றப்­பட்ட சிப்­பி­களை மேல­திக சட்ட நட­வ­டிக்­கை­களின் பொருட்டு அனுப்பி வைத்­துள்­ள­தா­கவும் ஹம்­பாந்­தோட்டை வன­ஜீ­வ­ரா­சிகள் அலு­வ­லக வனப் பாது­காப்பு அதி­காரி ஜே.ஏ.பி. விஜ­ய­கு­மார தெரிவித்துள்ளார்.

இந்­நி­லையில், கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் தங்­காலை நீதி­மன்றில் ஆஜர்­படுத் தப்­பட்­ட­தை­ய­டுத்து பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் எதிர்­வரும் பெப்­ர­வரி 6 ஆம் திகதி மீண்டும் அவரை நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­மாறும் நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார். சம்­பவம் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை ஹம்­பாந்­தோட்டை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

இச்சுற்றிவளைப்பில், ஹம்பாந் தோட்டை, கலமெடிய ரேகவ ஆகிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளும் இணைந்து கொண்டிருந்ததாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

(Visited 40 times, 1 visits today)

Post Author: metro