யாழ். சர்­வ­தேச வர்த்­தகக் கண்­காட்சி இன்று ஆரம்பம்

யாழ். சர்­வ­தேச வர்த்­தகக் கண்­காட்சி 2018, ( Jaffna International Trade Fair 2018    ) இன்று வெள்­ளிக்­கி­ழமை முதல் 28 ஆம் திக­தி­வரை யாழ். மாந­கர சபை மைதா­னங்­களில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஒன்­ப­தா­வது தட­வை­யாக இடம்­பெ­ற­வுள்ள இந்த வரு­டாந்த நிகழ்வு, உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச வர்த்­த­கர்கள் மற்றும் வர்த்­தக நிறு­வ­னங்கள் சந்­திக்கும் ஒரு முக்­கி­ய­மான கள­மாக அமை­ய­வுள்­ள­மையால், “வடக்குக்கான நுழை­வாயில் என அழைக்­கப்­ப­டு­கின்­றது. மிகவும் துரி­த­மாக வளர்ச்­சி­கண்டு வரு­கின்ற வட தீப­கற்­பத்தில் வர்த்­தக நட­வ­டிக்­கைகள் அனைத்­தையும் ஒரே இடத்தில் பெற்­றுக்­கொள்ள வழி­வ­குக்­கின்ற இந்த வர்த்­தகக் கண்­காட்­சியில் பரந்­து­பட்ட உற்­பத்­திகள் மற்றும் சேவை­களை உள்­ள­டக்­கிய 350 வரை­யான கண்­காட்­சிக்
­கூ­டங்கள் இடம்­பெ­ற­வுள்­ளன.

ஒவ்­வொரு ஆண்­டிலும் ஜன­வரி மாதத்தில் Lanka Exhibition and Conference Services (Pvt.) Ltd (LECS) நிறு­வ­னத்தால் ஏற்­பாடு செய்­யப்­பட்டு நிர்­வ­கிக்­கப்­படும் இந்­தக்­கண்­காட்­சிக்கு யாழ்ப்­பாணம் வர்த்­தக மற்றும் கைத்­தொழில் சம்­மே­ள­மனம் (CCIY) இணை ஏற்­பாட்­டா­ளர்­க­ளாக செயற்­ப­டு­வ­துடன், யாழ்.மாந­கர சபை, இலங்கை மாநாட்டு இலாகா மற்றும் சர்­வ­தேச வர்த்­தக மன்றம் ஆகி­ய­வற்றின் ஆத­ர­வுடன், கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சு, யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள இந்­திய துணைத்­தூ­த­ரகம், தேசிய ஏற்­று­ம­தி­யா­ளர்கள் சம்­மே­ளனம் மற்றும் இந்­தி­யாவின் ASSOCHAM ஆகி­ய­வற்றின் அங்­கீ­கா­ரமும் உள்­ளது.

 

 

வடக்கில் தமது வர்த்­தக நட­வ­டிக்­கை­களை விஸ்­த­ரிக்க விரும்­பு­கின்ற நிறு­வ­னங்­க­ளுக்­கான நிகழ்­வாக கரு­தப்­ப­டு­கின்ற பல்­வகை உற்­பத்­தி­க­ளைக்­கொண்ட இந்த வர்த்­தகக் கண்­காட்சி, அப்­பி­ராந்­தி­யத்­தி­லுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கும் எல்­லைக்குள் அப்­பாலே தமது வர்த்­தக முயற்­சி­களை விஸ்­த­ரிப்­ப­தற்­கான ஒரு அத்­தி­பா­ரத்தை ஏற்­ப­டுத்தி, எந்­த­வொரு தொழிற்­து­றை­யிலும் முன்­னணி செயற்­பாட்­டா­ளர்­க­ளுடன் தோளோடு தோளாக ஒன்­றாக செயற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­ப­ளிக்­கின்­றது.

 

ஒவ்­வொரு ஆண்­டிலும் சரா­ச­ரி­யாக 60,000 பேர் வரை­யான பார்­வை­யா­ளர்­களை ஈர்க்­கின்ற இந்­நி­கழ்வில் 2,500 இற்கும் மேற்­பட்ட உற்­பத்­தி­க­ளுக்குத் தள்­ளு­படி கிடைக்­கப்­பெ­று­வ­துடன், அனைத்து வயது மட்­டங்­க­ளையும் சார்ந்­த­வர்­க­ளுக்­கான பொழு­து­போக்கு மற்றும் வாய்ப்­பு­களும் உள்­ளன. சிறு­வர்கள் விளை­யாடி மகிழ்­வ­தற்­கான பிர­தே­சத்­துடன், பொழு­து­போக்கு பூங்கா ஒன்றும், பல­வ­கைப்­பட்ட உணவு மற்றும் பான வகை­களும், வியப்­பூட்டும் பரி­சு­களை வென்­று­தரும் ஒவ்­வொரு மணித்­தி­யா­லத்­திலும் இடம்­பெறும் அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்­டி­ழுப்பும் அங்கு இடம்­பெ­ற­வுள்­ளன.

இந்­திய வர்த்­தக சம்­மே­ளனக் கூட்­ட­மைப்பின் (ASSOCHAM) ஏற்­பாட்­டிலும், அனு­ச­ர­ணை­யிலும் இந்­தி­யா­வி­லி­ருந்து வரு­கை­த­ர­வுள்ள விசேட தூதுக்­குழு ஒன்றும் இந்த ஆண்டு வர்த்­தகக் கண்­காட்­சியில் கலந்­து­கொள்­ள­வுள்­ள­துடன், வட தீப­கற்­பத்தில் வர்த்­தக மற்றும் முத­லீட்டு வாய்ப்­பு­களை ஆரா­ய­வுள்­ளது.

நாட்டின் தென்­பா­கங்­களைச் சேர்ந்த நிறு­வ­னங்கள் மற்றும் உற்­பத்­தி­களை மட்டும் உள்­ள­டக்­கி­ய­வாறு 120 கண்­காட்­சிக்­கூ­டங்­க­ளுடன் 2002 ஆம் ஆண்டில் ஆரம்­பிக்­கப்­பட்ட இக்­கண்­காட்சி செயற்­றிட்டம் கடந்த காலங்­களில் தளைத்­தோங்கி, சர்­வ­தேச பங்­கா­ளர்கள் மற்றும் வட­மா­கா­ணத்தில் வளர்ச்சி கண்டு வரு­கின்ற நிறு­வ­னங்­க­ளையும் தற்­போது உள்­ள­டக்­கி­யுள்­ளது.

எதிர்ப்­பார்த்­தி­ராத அள­வுக்கு கடந்­த ­கா­லங்­களில் இக்­கண்­காட்சி நிகழ்வு வளர்ச்சி கண்­டுள்­ளமை தொடர்பில் LECS நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யான ஆசிம் முக்தார் கருத்துத் தெரி­விக்­கையில், வடக்கில் கிடைக்கும் வர்த்­தக வாய்ப்­பு­க­ளையும், வளர்ச்சி வாய்ப்­பு­க­ளையும் வர்த்­த­கர்கள் இனங்­கண்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார். “நாம் முதன்­மு­றை­யாக கண்­காட்சி நிகழ்வை ஏற்­பாடு செய்த வேளையில் கண்­காட்­சியில் கலந்­து­கொண்ட வர்த்­த­கர்கள் பலர் அவர்­க­ளு­டைய உற்­பத்­திகள் மற்றும் சேவைகள் ஒரு­நா­ளி­லேயே விற்றுத் தீர்ந்­த­மையால் நிகழ்வில் தொடர்ந்­து­வரும் தினங்­க­ளுக்கு கண்­காட்­சிக்­கூ­டங்­களை மூட­வேண்டி ஏற்­பட்­டது.

கடந்த காலங்­களில் பல்­வேறு துறை­களில் வடக்கில் வெளிப்­ப­டை­யான வளர்ச்­சியை நாம் காணப்­பெற்­றுள்­ள­துடன், இத்­த­கைய நிகழ்வின் மூல­மாக, குறிப்­பாக சிறிய மற்றும் நடுத்­தர அள­வி­லான வர்த்­த­கத்­து­றை­க­ளுக்கு வாய்ப்­பு­களைத் தோற்­று­விப்­ப­திலும் முக்­கிய பங்கு வகித்­துள்­ளது.” என்று அவர் குறிப்­பிட்டார்.

சமூ­கத்­திற்கு பிர­தி­யு­ப­காரம் செய்ய என்ற முன்­னெ­டுப்­பிற்கு அமை­வாக டிக்கட் விற்­பனை மூல­மாக ஈட்­டப்­ப­டு­கின்ற பணத்தை ஒவ்­வொரு ஆண்டும் யாழ்ப்­பாணம் வர்த்­தக மற்றும் கைத்­தொழில் சம்­மே­ள­னத்­திற்கு (CCIY) நன்­கொ­டை­யாக வழங்கி, அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள சிறிய மற்றும் நடுத்­தர அள­வி­லான தொழில் முயற்­சி­கள்­மீது மீள் முத­லீடு செய்து, பல வர்த்­த­கர்கள் மற்றும் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்கு மிகவும் தேவை­யா­க­வுள்ள விட­யங்­க­ளுக்கு LECS உதவி வரு­கின்­றது.

ஒன்­ப­தா­வது தடவையாக இடம்­பெ­று­கின்ற இக்­கண்­காட்­சியில் நிர்­மாணம், விருந்­தோம்பல், உணவு, பான­வகை மற்றும் பொதி­யிடல், மோட்டார் வாகனம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிதி, ஆடை மற்றும் புடவை, விவசாயம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் மேலும் பல துறைகள் இந்த மூன்று நாள் நிகழ்வில் இடம்பெறவுள்ளது. 2018 கண்காட்சி நிகழ்வு இடம்பெறும் சமயத்தில் இதற்கு இணையாக வேறு பல நிகழ்வுகளையும் ஏற்பாட்டாளர்கள் ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

இக்கண்காட்சிக்கான பிரதான அனுசரணையை எஸ் லோன் லங்கா நிறுவனமும் வழங்குகிறது. உத்தியோகபூர்வ தொலைத் தொடர்பு பங்களாராக மொபிடெல் நிறுவனம் விளங்குகிறது. உத்தியோபூர்வ கூரைப் பங்காளராக சென். அன்தனீஸ் இண்டஸ் ரீஸ் குழும நிறுவனமும் உத்தி யோகபூர்வ உணவுப் பங்காளராக றுகுணு ஃபூட்ஸ் நிறுவனமும் விளங்குகின்றது.

(படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்)

(Visited 32 times, 1 visits today)

Post Author: metro