90ஆவது ஒஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் அறிவிப்பு: சிறந்த இயக்­குநர் பட்­டி­யலில் நடிகை க்ரேடா கெர்விக்

2017 ஆம் ஆண்டு வெளி­யான திரைப்­ப­டங்­க­ளுக்­கான ஒஸ்கார் விரு­துக­ளுக்­கு­ரிய பரிந்­துரைப் பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
90 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா எதிர்­வரும் மார்ச் 4 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை­பெ­ற­வுள்­ளது.

இவ்­வி­ழாவின் விரு­து­க­ளுக்­கான பரிந்­து­ரைப்­பட்­டியல் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது. பிரி­யங்கா சோப்ரா, ரோசா­ரியோ டாசன், ரெபெல் வில்சன், மிஷெல் யோ உள்­ளிட்டோர் அறி­வித்­தனர்.

இப்­பட்­டி­யலில் ஷேப் ஒவ் தி வோட்டர் திரைப்­படம் 13 விரு­து­க­ளுக்குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. மெக்­ஸி­கோவில் பிறந்த குய்­லெர்மோ டெல் டோரோ இயக்­கிய படம் இது. கிறிஸ்­டோபர் நோலன் இயக்­கிய டன்கிர்க் படம் 8 விரு­து­க­ளுக்குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

சிறந்த திரைப்­ப­டங்­க­ளுக்­கான பரிந்­துரைப் பட்­டி­யலில், கோல் மீ பை யுவர் நேம், டார்க்கெஸ்ட் ஹவர், டன்கிர்க், கெட் அவுட் ஆகிய படங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

சிறந்த வெளி­நாட்டு மொழி திரைப்­ப­டத்­துக்­கான விரு­துக்கு, எ ஃபெண்­டாஸ்டிக் வுமன் (சிலி), தி இன்சல்ட் (லெபனான்), லவ்லெஸ் (ரஷ்யா), ஆன் பாடி அண்ட் சோல் (ஹங்­கேரி), தி ஸ்கொயர் (ஸ்வீடன்) ஆகிய படங்கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன.

கெட் அவுட் திரைப்­பட இயக்­குநர் ஜோர்டன் பீலே சிறந்த இயக்­குநர் பிரிவில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டதன் மூலம், இந்தப் பிரிவில் பரிந்­து­ரைக்­கப்­படும் 5வது கருப்­பின இயக்­குநர் என்ற பெரு­மையை பெற்றார். சிறந்த திரைப்­ப­டத்­துக்­கான பிரிவில் மொத்தம் 9 படங்கள் போட்­டி­யி­ட­வுள்­ளன.

இதே­வேளை, லேடி பேர்ட் படத்தின் இயக்­குநர் க்ரேடா கெர்விக் சிறந்த இயக்­குநர் விரு­துக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டதன் மூலம், ஒஸ்­காரில் சிறந்த இயக்­கு­ந­ருக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்கும் 5 ஆவது பெண் இயக்­குநர் என்ற பெரு­மையை பெற்றார்.

 

மட்­பவுண்ட் திரைப்­பட ஒளிப்­ப­தி­வாளர் ரேஷல் மாரிஸன், சிறந்த ஒளிப்­ப­திவு பிரிவில் பரிந்­து­ரைக்­கப்­படும் முதல் பெண் என்ற சாத­னையைப் படைத்தார்.

1929 ஆம் ஆண்டு முதல் வழங்­கப்­படும் ஒஸ்கார் விருது­களில் இதற்கு முன் 4 பெண்கள் மாத்­தி­ரமே சிறந்த இயக்குர் விரு­துக்குப் பரிந்­து­ரைக்க­ப்பட்­டி­ருந்­தனர்.

1976 இல் வெளி­யான செவன் பியூட்டிஸ் படத்­துக்­காக லீனா வேர்ட்­முல்லர், 1993 இல் வெளி­யான தி பியானோ படத்­துக்­காக ஜேன் சம்­பியன், 2003 இல் வெளி­யான லொஸ்ட் இன் ட்ரான்ஸ்­லேஷன் படத்­துக்­காக சோபியா கொபோலோ, 2009 இல் வெளி­யான
“தி ஹர்ட் லொக்கர்” படத்­துக்­காக கெத்­தரின் பிகிலோ ஆகி­யோரே மேற்­படி நால்­வ­ரு­மாவர்.

இவர்­களில் கெத்­தரின் பிகிலோ மாத்­தி­ரமே இது­வரை சிறந்த இயக்­கு­ந­ருக்­கான ஒஸ்கார் விருதை வென்ற ஒரே பெண்­ணாக விளங்­கு­கிறார்.

2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் 9 விரு­து­க­ளுக்குப் பரிந்­து­ரைக்­கப்­பட்ட “தி ஹர்ட் லொக்கர்” சிறந்த படம் உட்­பட 6 விரு­து­களை வென்­றது.

8 வரு­டங்­களின் பின் இம்­முறை சிறந்த இயக்­கு­ந­ருக்­கான ஒஸ்கார் விரு­துக்குப் பரிந்­து­ரைக்­கப்­பட்ட பெண்­ணான, க்ரேடா கெர்விக் (34) ஒரு நடிகை ஆவார்.

2006 ஆம் ஆண்­டி­லி­ருந்து ஏரா­ள­மான திரைப்­ப­டங்­க­ளிலும் தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் நடித்த க்ரேடா கெர்விக், பல படங்­களில் இணை எழுத்­தா­ள­ராக பணி­யாற்­றினார்.

2008 ஆம் ஆண்டு வெளி­யான “நைட்ஸ் அன்ட் வீக்கென்ட்ஸ்” திரைப்­ப­டத்தில் நடித்­த­துடன் இணை எழுத்­தாளர், இணை இயக்­கு­ரா­கவும் பணியாற்றினார்.

முதல் தடவையாக அவர் தனியாக இயக்கிய “லேடி பேர்ட்” படத்தில் அவர் நடிக்கவில்லை. இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை (சோரிஸ் ரொனன்), சிறந்த துணை நடிகை (லோரி மெட்காவ்) சிறந்த திரைக்கதை ஆகிய 5 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

(Visited 99 times, 1 visits today)

Post Author: metro