இனிமேல் நல்ல படங்­க­ளில் ­மட்­டுமே நடிப்­­பேன் – தமன்­னா

கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கும் நல்ல கதை­யம்சமுள்ள படங்­களில் மட்­டுமே நடிப்பேன் என்று நடிகை தமன்னா கூறி­யுள்ளார்.

தமன்னா 12 வரு­டங்­க­ளாக சினி­மாவில் இருக்­கிறார். ‘கல்­லூரி’, ‘படிக்­கா­தவன்’, ‘அயன்’, ‘பையா’, ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘தர்­ம­துரை’ என்று அவர் நடித்த ஹிட் படங்­களின் பட்­டியல் நீள்­கி­றது.

பாகு­ப­லியில் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­திரம் ஏற்றார். இந்­தியில் வெற்­றி­க­ர­மாக ஓடிய ‘குயின்’ படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’கில் தற்­போது நடித்து வரு­கிறார். இந்தி, தெலுங்கு படங்­களும் கைவசமுள்­ளன. இனிமேல் கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கும் நல்ல கதை­யம்சம் உள்ள படங்­களில் மட்­டுமே நடிப்பேன் என்றார் தமன்னா.

இது­கு­றித்து அவர் அளித்த பேட்டி வரு­மாறு:- நான் சினி­மாவில் இவ்­வ­ளவு காலம் நீடிப்­பது அதிர்ஷ்டம். இது­வரை கிடைத்த அனு­ப­வங்­களை இனிமேல் நடிக்­கப்­போ­கிற படங்­களில் காட்­டப்­போ­கிறேன். சினி­மா­வுக்கு வந்த புதிதில் ஒன்­றி­ரண்டு தவ­றுகள் செய்­தாலும் பெரி­தாக எடுத்­துக்­கொள்ள மாட்­டார்கள். புதுசா வந்­துள்ளார். போகப்­போக கற்­றுக்­கொள்வார் என்று நினைப்­பார்கள்.

ஆனால் இனிமேல் அப்­படி முடி­யாது. எனது பொறுப்பு அதி­க­மாகியிருக்­கி­றது. இத்­தனை படங்­களில் நடித்து இவ்­வ­ளவு அனு­பவம் சம்­பா­தித்த அப்­பு­றமும் கூட சாதா­ரணப் படங்­களில் நடித்தால் அதற்கு அர்த்தம் என்ன இருக்­கி­றது? அர்த்­தமே இல்லை. அதனால் நடிப்­புக்கு முக்­கி­யத்­துவம் இருக்கும் நல்ல கதை­யம்சம் உள்ள படங்­களில் மட்­டுமே இனிமேல் நடிப்பேன். அது வர்த்­தக ரீதி­யா­கவும் வெற்றி பெறு­கிற பட­மா­கவும் இருக்க வேண்டும். அது­மா­திரி படங்­களை தேர்வு செய்து நடிப்பேன்.

கதா­நா­ய­கிகள் நவீன ஆடை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கி­றார்கள். எவ்­வ­ளவு நவீன ஆடை­யாக இருந்­தாலும் அணி­வ­தற்கு சௌ­க­ரி­ய­மாக இருக்­கி­றதா என்று பார்க்க வேண்டும். நாம் என்ன உடை அணி­கிறோம் என்­பதை விட அது உடல் வாகுக்கு ஏற்றமாதிரி இருக்கிறதா என்பது முக்கியம். சௌகரியமான ஆடை அணிந்தால் தான் தன்னம்பிக்கை யோடு இருக்க முடியும்.
இவ்வாறு தமன்னா கூறினார்.

(Visited 31 times, 1 visits today)

Post Author: metro