கொலைச் சம்­ப­வத்தில் குற்­ற­வா­ளி­யான 27 வயது இளை­ஞ­ருக்கு மரண தண்­டனை

(கதீஸ்)

வவு­னி­யாவில் இடம்­பெற்ற கொலைச்­சம்­பவம் தொடர்பில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட 27 வய­தான இளை­ஞ­ருக்கு வவு­னியா மேல் நீதி­மன்­றத்தால் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஸ்ரீரா­ம­புரம் எனும் இடத்தில் இரு தரப்­பி­ன­ருக்கு இடையில் ஏற்­பட்ட சண்­டையில் ஒரு­வ­ருக்கு மர­ணத்தை விளை­வித்த குற்­றச்­சாட்டில் மூவர் வவு­னியா பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு வவு­னியா நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்­தன.

இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் 2 ஆம் திகதி சட்­டமா அதி­ப­ரினால் வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் இந்த எதி­ரி­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. வழக்கு விசா­ர­ணைகள் மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் முன்­னி­லையில் நடை­பெற்று வந்­த­துடன் வழக்கு தொடுநர் தரப்பில் வழக்கை அரச சட்­ட­வாதி ஐ.எம்.எம்.பாஹிம் நெறிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இந்த வழக்­குடன் தொடர்­பு­டைய இரண்டாம் மற்றும் மூன்றாம் எதி­ரி­க­ளுக்கு எதி­ரான குற்றம் நிரூ­பிக்­கப்­ப­டா­ததால் அவ்­வி­ரு­வரும் வழக்­கி­லி­ருந்து விடு­தலை செய்­யப்­பட்­ட­துடன் முதலாம் எதிரி தாக்­கி­ய­தால்தான் மரணம் சம்பவித்துள்ளது என்பது சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதனையடுத்து மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

(Visited 29 times, 1 visits today)

Post Author: metro