மஹிந்­தவின் பிர­ஜா­வு­ரி­மையை நீக்­கு­மாறு சிபா­ரிசு செய்யும் அதி­காரம் ஆணைக்­கு­ழு­வுக்கு இல்லை!- கூட்டு எதிர்க்­கட்சி

(எம்.சி.நஜி­முதீன்)

பாரிய ஊழல் மோசடி விசா­ரணை ஆணைக்­குழு அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சிறு குற்­றச்­சாட்­டு­களை முன்­னி­லைப்­ப­டுத்தி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­க்ஷவின் பிர­ஜா­வு­ரி­மையை நீக்­கு­வ­தற்கு முனை­கின்­றனர். எனினும் அவரின் பிர­ஜா­வு­ரி­மையை இல்­லாது செய்­யு­மாறு சிபா­ரிசு செய்யும் அதி­காரம் குறித்த ஆணைக்­கு­ழு­வுக்கு இல்லை.

அந்த ஆணைக்­குழு விசா­ரணைக் குழுவே தவிர, ஜனா­தி­பதி விசேட ஆணைக்­கு­ழு­வல்ல. மேலும் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்க்ஷ தனது பத­விக்­கா­லத்தில் மேற்­கொண்ட விட­யங்கள் பற்றி எந்த நீதி­மன்­றத்தின் முன்­னி­லை­யிலும் விசா­ரணை நடத்த முடி­யாது என பிவி­துறு ஹெல­உ­று­ம­யவின் தலை­வரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­பன்­பில தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லயில் அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மத்­திய வங்கி பிணை­முறி மோசடி குறித்து முன்னாள் நிதி­யைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக இரு குற்­றச்­சாட்­டு­களே உள்­ளன. எனினும் பிணை­முறி மோசடி இடம்­பெ­றும்­போது மத்­திய வங்கி நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் பொறுப்பின் கீழ் இல்லை.

அது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் பொறுப்பின் கீழே இருந்­தது. எனவே, பிர­தமர் தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு ரவி கரு­ணா­நா­யக்க மீது சகல விடயங்களையும் திணிக்க முனைகிறார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த மோசடியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. ஆகவே அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

(Visited 16 times, 1 visits today)

Post Author: metro