இறுதிப் போட்­டியில் யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியை வென்று புனித சூசை­யப்பர் கல்­லூரி மீண்டும் சம்­பி­ய­னா­னது

(நெவில் அன்­தனி)

யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி அணிக்கு எதி­ராக, கொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடலில் நேற்று மாலை நடை­பெற்ற 18 வய­துக்­குட்­பட்ட அகில இலங்கை பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான முதலாம் பிரிவு கால்­பந்­தாட்ட இறுதிப் போட்­டியில் 3 – 1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­யீட்­டிய மரு­தானை புனித சூசை­யப்பர் கல்­லூரி அணி சம்­பியன் பட்­டத்தை தக்­க­வைத்­துக்­கொண்­டது.


19 வய­துக்­குட்­பட்ட தேசிய வீரர்­க­ளான அசேல மதுஷான் மற்றும் சமோத் ரஷ்­மித்த ஆகிய இரு­வரும் அலா­தி­யான கோல்­களைப் போட்டு தமது அணியின் வெற்­றியை உறுதி செய்­தனர். எவ்­வா­றா­யினும் போட்­டியின் இரண்­டா­வது பகு­தியில் மூன்று வீரர்கள் மத்­தி­யஸ்­தரின் சிவப்பு அட்­டைக்கு இலக்­கா­னமை பாட­சாலை கால்­பந்­தாட்­டத்­துக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தாகத் தென்­ப­ட­வில்லை.

இப் போட்­டியில் இரண்டு அணி­களும் சம அளவில் மோதிக்­கொள்ளும் என பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்­ட­துடன் புனித பத்­தி­ரி­சியார் அணி தலைகீழ் வெற்­றியை ஈட்டும் என்ற கருத்தும் நில­வி­யது. ஒவ்­வொரு ஆட்ட நேரப் பகு­தி­யிலும் தலா 40 நிமி­டங்­களை இப் போட்­டியின் ஆரம்­பத்தில் இரண்டு அணி­யி­னரும் திற­மை­யாக விளை­யா­டி­யதை அவ­தா­னிக்க முடிந்­தது.

போட்­டியின் 12ஆவது நிமி­டத்தில் புனித சூசை­யப்பர் மத்­திய கள வீரர் சி. பர­மான்த, இட­து­கோ­டி­யி­லி­ருந்து பரி­மா­றிய பந்தை தனது பாதங்­களில் கட்­டுப்­ப­டுத்­திய சமோத் ரஷ்­மிக்க சுமார் 22 யார் தூரத்­தி­லி­ருந்து பந்தை உதைத்து அலா­தி­யான கோல் ஒன்றைப் போட்டார்.


எவ்­வா­றா­யினும் நான்கு நிமி­டங்கள் கழித்து புனித பத்­தி­ரி­சியார் அணி வீரர் டி.எச். ஹெய்ன்ஸ் சுமார் 35 யார் தூரத்­தி­லி­ருந்து உயர்த்தி உதைத்த பந்து புனித சூசை­யப்பர் அணியின் கோல் காப்­பாளர் எம்.இ. கொடி­கா­ரவின் தலைக்கு மேலால் சென்று கோலினுள் புக கோல் நிலை சம­னா­னது.

இதனைத் தொடர்ந்து இடை­வேளை வரை இரண்டு அணி­களும் சரி­ச­ம­மாக மோதிக்­கொண்ட வண்ணம் இருந்­தன.
இடை­வே­ளையின் பின்னர் சிறந்த வியூ­கங்­க­ளு­டனும் வேகத்­து­டனும் விளைா­யா­டிய புனித சூசை­யப்பர் அணி­யினர் 51ஆவது நிமி­டத்தில் தனி ஒரு­வ­ராக பந்தை நகர்த்­தி­ய­வாறு எதி­ரணி வீரர்­களைக் கடந்­து­சென்று பந்தை கோலினுள் புகுத்­தினார்.

எட்டு நிமி­டங்கள் கழித்து கீழே வீழந்து கிடந்த ரஷ்­மிக்­கவின் முகத்தில் உதைத்த புனித பத்­தி­ரி­சியார் அணித் தலைவர் எஸ். அபீஷன் மத்­தி­யஸ்தர் ஏ.ஏ. தரங்­கவின் சிவப்பு அட்­டைக்கு இலக்­கானார்.


மேலும் 6 நிமி­டங்கள் கழித்து மத்­திய களத்­தி­லி­ருந்து அணித் தலைவர் ஜேசன் நிதேஷ் பெர்­னாண்டோ மத்­திய களத்­தி­லி­ருந்த பரி­மா­றிய பந்தைப் பெற்­றுக்­கொண்ட பி. எல். பிங்கோ அதனை உட­ன­டி­யாக மது­ஷா­னுக்கு பரி­மாற அவர் இலா­வ­க­மாக பந்தை கோலினுள் புகுத்தி புனித சூசை­யப்பர் அணியின் 3ஆவது கோலை போட்டார்.

போட்டி முடி­வ­டைய சில நிமி­டங்கள் இருந்­த­போது இரண்டு அணி­க­ளையும் சேர்ந்த இரண்டு வீரர்­க­ளான ஆர். சாந்தன் (புனித பத்­தி­ரி­சியார்), எஸ். குநே (புனித சூசை­யப்பர்) ஒரு­வரை ஒருவர் தாக்­கி­யதால் இரு­வரும் மத்­தி­யஸ்­தரின் சிவப்பு அட்­டைக்கு இலக்­கா­கினர்.

இறுதிச் சுற்­றுக்கு றினோன் விளை­யாட்டுக் கழகம் பூரண அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. போட்­டியின் அதி சிறந்த வீரர் மற்றும் அதிக கோல்கள் (16) போட்ட வீரர் ஆகிய இரண்டு விரு­து­க­ளையும் அசேல மதுஷான் வென்­றெ­டுத்தார்.

சிறந்த கோல்­காப்­பாளர் விருது எம். கொடி­கா­ர­வுக்கு வழங்­கப்­பட்­டது. ஜே. ஸ்ரீரங்கா பிரதம அதிதியாகவும் றினோன்க கழகத் தலைவர் ரொபர்ட் பீரிஸ் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்.
மருதானை ஸாஹிரா கல்லூரி அணியை 5 – 4 என்ற பெனல்டி கணக்கில் வெற்றிகொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரி அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது.

(Visited 29 times, 1 visits today)

Post Author: metro