கணவனுக்காக 3 பேரை கொலை செய்த பெண்ணொருவர் 4ஆவது கொலைக்காக சதித்திட்டம் தீட்டியபோது கைது!

தனது கணவனுக்காக 3 பேரை கொலை செய்த இந்தியாவின் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் 4ஆவது கொலைக்காக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தபோது 14 பேருடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைக்கால் வியாபாரியான ராமுவுக்கு இரண்டு மனைவிகள். ஒரே வீட்டில் தங்கியிருந்த அவர்களுக்குள் நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. ஒரு கட்டத்தில் இரண்டாவது மனையுடன் மட்டும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் முதல் மனைவி முவை பிரிந்துள்ளார்.

இதையடுத்து ராமு, இரண்டாவது மனைவி இருவரையும் கொலை செய்வதற்கு கூலிப்படையை முதலாவது மனைவி அனுப்பியுள்ளார். அதில் ராமு கொலை செய்யப் பட்டதுடன் இரண் டாவது மனைவி படு காயங் களுடன் தப்பி யுள்ளார்.  தனது கணவரின் கொலை க்குக் காரணமான அனைவரையும் பழிக்குப் பழி வாங்குவேன் என்று சபதம் எடுத்தார் இரண்டாவது மனைவி. அதன்படியே ராமுவின் முதல் மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்தார்.

இதற்கிடையில்தான் புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான வி.எம்.சி.சிவக்குமார் கடந்த ஆண்டு கரைக்கால் மாவட்டம் நிரவியில் கூலிப்படைக் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டும், நாட்டு வெடிகுண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலத்தையே உலுக்கிய இந்தக் கொலைச் சம்பவம் குறித்து பொலிஸ் நடத்திய விசாரணையில், தனது கணவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக ராமுவின் இரண்டாவது மனைவி தான் கூலிப்படை வைத்து முன்னாள் அமைச்சரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை தேடும் பணியில் பொலிஸ் ஈடுபட்டதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி அவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இதையடுத்து புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்ட ராமுவின் இரண்டாவது மனைவி மீது குண்டாஸ் போடப்பட்டது. இதற்கிடையில் சிறைக்குள்ளேயே மணிகண்டன் என்பவருடன் தனியறையில் சந்தித்து சதித்திட்டம் தீட்டியதாக தகவல் வெளியானதையடுத்து, சில மாதங்களுக்கு முன் நிபந்தனை பிணை பெற்று வெளியே சென்று தலைமறைவான இரண்டாவது மனைவி, பல்வேறு மாறுவேடங்களில் அப்பகுதியை சுற்றி வந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் புதுச்சேரி காமராஜர் வீதியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பிறந்த தின விழா என்று கூறி அறையொன்றை எடுத்த இரண்டாவது மனைவி சதித்திட்டம் தீட்டுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எஸ்.எஸ்.பி ராஜீவ் ரஞ்சன் உத்தரவின் பேரில் அதிரடியாக அங்கு சென்ற பொலிஸார் சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டாவது மனைவி, மர்டர் மணிகண்டனின் ஆதரவு நபர்கள் உள்ளிட்ட 14 பேரை பொலிஸார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுச்சேரி மாவட்ட முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்தவர் விக்ரமன் என்பவரும் இந்தக் கும்பலோடு கைது செய்யப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

(Visited 82 times, 1 visits today)

Post Author: metro