விபத்தில் சிக்கி மூளைச்­சா­வ­டைந்த பெண்ணின் உறுப்­புகள் அனைத்தும் தான­மாக வழங்­கப்­பட்­டன

(ரெ.கிறிஷ்­ணகாந்)

விபத்தில் சிக்கி ஹோமா­கம வைத்­தி­ய­சா­லையின் தீவிர கண்­கா­ணிப்பு பிரிவில் சிகிச்சைப் பெற்­று­வந்த மூளைச்­சா­வ­டைந்த பெண் ஒரு­வரின் அனைத்து உடல்­உ­றுப்­பு­களும் தான­மாக வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் தெரி­வித்­துள்­ளது.
பாதுக்க, கொடி­கங்­கொட பிர­தே­சத்தில் வசித்­து­வந்த திலினி ஜீவந்தி அல்விஸ் என்ற ஒரு பிள்­ளையின் தாயொ­ரு­வரின் உட­லு­றுப்­பு­களே இவ்­வாறு தான­மாக வழங்­கப்­பட்­டுள்­ளன.

இப்பெண் அண்­மையில் தனது கண­வ­ருடன் மோட்டார் சைக்­கிளில் சென்று திரு­மண நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு வீடு திரும்­பி­ய­போது, பாதுக்க, வேர­கல – மாஹிங்­கல வீதியில் அவர்கள் பய­ணித்த மோட்டார் சைக்கிள் வீதி­யை­விட்டு விலகி கம்பி வேலி­யொன்றில் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் கண­வ­ரான சமீர ஜய­கொடி என்ற 27 வய­தான நபர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தி­ருந்த நிலையில் விபத்தில் படு­கா­ய­ம­டைந்த அவ­ரது மனை­வி­யான திலினி கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

தலையில் ஏற்­பட்ட பலத்த காயத்­தினால் அவரை குணப்­ப­டுத்த முடி­யாத நிலையில் அவர் ஹோமா­கம வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட தீவிர கண்­கா­ணிப்பு பிரிவில் அனு­மதிக் கப்­பட்டார்.

இந்­நி­லையில், அவ­ரது தலையில் பலத்த அடி ஏற்­பட்­ட­மை­யினால் அவர் மூளைச் சாவ­டைந்­துள்­ளதை வைத்­தி­யர்கள் உறு­திப்­ப­டுத்­தினர்.

பின்னர் அவ­ரது தந்தை மற்றும் உற­வி­னர்­களின் அனு­ம­தி­யுடன், மூளைச் சாவ­டைந்த அப்­பெண்ணின் உடலில் இருந்து பெறத்­தக்க அனைத்து உடல் உறுப்­பு­களும் சுமார் 5 மணித்­தி­யால சத்­திர சிகிச்­சையின் மூலம் அகற்­றப்­பட்­டுள்­ளது.

இவ­ரது உட­லி­லி­ருந்து அகற்­றப்­பட்ட கல்­லீரல் ராகம பொது வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்த ஒரு­வ­ருக்கும், ஒரு சிறு­நீ­ரகம் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் நோயா­ளி­யொ­ரு­வ­ருக்கும், மற்­றைய சிறு­நீ­ரகம் மாளி­கா­வத்த சிறு­நீ­ரக வைத்­தி­ய­சா­லையின் நோயா­ளி­யொ­ரு­வ­ருக்கும் பொருத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், அவ­ரது காலி­லி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட எலும்­புகள், மனித திசு வங்­கிக்கும், கண்கள் இரண்டும் இலங்கை கண்தான சங்கத்துக்கும் தானமாக வழங்கப்பட்டதாக ஹோமாகம வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி படுவாவெல தெரிவித்துள்ளார். சத்திரசிகிச்சையின் பின்னர் திலினியின் உடல் அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது

(Visited 19 times, 1 visits today)

Post Author: metro