ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்திக் கொலை: நேவி சம்பத் எனும் பிசாத் ஹெட்­டி­ஆ­ரச்­சியை கைது செய்ய பொது­மக்­களின் உத­வி­யினை நாடும் சி.ஐ.டி.

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் கோரி பின்னர் கொலை செய்­தமை தொடர்பில் தேடப்­படும் பிர­தான சந்­தேக நப­ரான கடற்­ப­டையின் முன்னாள் லெப்­டினன் கொமாண்டர் பிரசாத் சந்­தன ஹெட்டிஆராச்சி அல்­லது நேவி சம்­பத்தை கைது செய்­வ­தற்கு பொலிஸார் பொது­மக்­களின் உத­வியை நாடி­யுள்­ளனர்.

குறித்த சந்­தேக நபர் தொடர்ச்­சி­யாக தலை­ம­றை­வா­கி­யுள்ளார். இத­னை­ய­டுத்து கோட்டை நீதி­வானால் அவரைக் கைது செய்ய திறந்த பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் பொது மக்­களின் உத­வியை இந்த விட­யத்தில் நாடு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

1977 பெப்­ர­வரி மாதம் 9 ஆம் திகதி பிறந்த குறித்த சந்­தேக நபர் வெல்­லம்­பிட்டி பகு­தியை சேர்ந்­தவர் என குறிப்­பிடும் பொலிஸார் அவர் தொடர்பில் தகவல் தெரிந்­த­வர்கள், குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மேற்­பார்வை மையத்தின் 011 -2422176 எனும் இலக்­கங்­க­ளுக்கோ குற்றப் புல­னாய்வுப் பிரிவின் 011 -2320141 -/ 45 எனும் இலக்­கங்­க­ளுக்கோ குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் 011-2393621 எனும் இலக்­கத்­துக்கோ அறி­விக்க முடியும் என பொலிஸ் பேச்­சாளர் தெரி­வித்தார்.

தேட­ப்படும் குறித்த சந்­தேக நபர் முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் நிரபராதி எனக் கருதி விடுவிக்கப்பட்டவராவார்.

(Visited 32 times, 1 visits today)

Post Author: metro