70 ஆவது சுதந்­திர தினத்தில் கலந்து கொள்ளும் இள­வ­ரசர் எட்வர்ட் தம்­பதி சவால்­களில் வெற்றி கண்ட இளை­ஞர்­க­ளையும் சந்தி­த்து கலந்­து­ரை­யா­டுவர்

(இரோஷா வேலு)

இலங்­கையின் 70 ஆவது சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­காக பிரிட்­டனின் இரண்டாம் எலி­ஸபெத் மகா­ரா­ணியின் இளைய மகன் இள­வ­ரசர் எட்வர்ட் இலங்­கைக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நேற்று பிற்­பகல் இலங்கை வந்­த­டைந்தார். இலங்­கையின் 70 ஆவது சுதந்­திர தின தேசிய நிகழ்வின் போது பிரித்­தா­னிய அரச குடும்­பத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் இள­வ­ரசர் எட்வர்ட் விசேட அதி­தி­யாக கலந்து சிறப்­பிக்­க­வுள்ளார்.


இலங்­கையின் 70 ஆவது சுதந்­திர தின வைபவம் எதிர்­வரும் நான்காம் திகதி கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது விசேட அதி­தி­யாகக் கலந்து கொண்டு சிறப்­பிக்கும் முக­மாக பிரித்­தா­னிய குடும்­பத்தின் பிர­தி­நி­தி­யாக இரண்டாம் எலி­ஸபெத் மகா­ரா­ணியின் இளைய மகன் இள­வ­ரசர் எட்வர்ட் இலங்­கைக்கு வருகைத் தந்­துள்ளார்.


இவர் இலங்­கைக்கு ஐந்து நாள் விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ள நிலையில் இவரின் இந்த இலங்கையின் விஜ­யத்தின் போது, இலங்கை மற்றும் பிரித்­தா­னி­யாவின் நீண்­ட­கால உறவு, பொது­ந­ல­வாயம் மற்றும் இலங்கை இளை­ஞர்­களின் கல்வி தொடர்­பாக கவனம் செலுத்­த­வுள்­ள­தா­கவும் கொழும்­பி­லுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிக­ரா­லயம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் இந்த ரோயல் ஜோடி பல்­வேறு வகை­யான சமூக சவால்­களில் வெற்றி கண்ட இளை­ஞர்­க­ளையும் சந்­திக்­க­வுள்­ள­தாக தெரிய வருகின்றது. இவற்­றுடன் ரத்­ம­லா­னை­யி­லுள்ள மாற்றுத் திற­னா­ளி­களின் பாட­சா­லைக்கு சென்று அங்கு எடின்பர்க் விரு­து­க­ளுக்­கான திட்டம் குறித்தும் சமூக சவால்­களை எதிர்­கொள்­ளவும் எவ்வாறு தம்மை சமூகத்துடன் ஒன்றுணைத்து வெற்றிக்கு சான்றுகளாக மாறுவது போன்ற வெற்றிப்பாதைக்குரிய திட்டங்கள் குறித்தும் உரையாடவுள்ளனர்.

(Visited 48 times, 1 visits today)

Post Author: metro