2004 : சவூதி அரே­பி­யாவில் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் 251 பேர் சன நெரி­சலில் உயி­ரி­ழப்பு

வரலாற்றில் இன்று…

பெப்ரவரி – 01

 

1662 :  ஒன்­பது மாத முற்­று­கையின் பின்னர் சீனாவின் இரா­ணுவத் தள­பதி கொக்­சிங்கா, தாய்வான் தீவைக் கைப்­பற்­றினார்.

1788 :  ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்­லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீரா­விப்­ப­ட­குக்­கான காப்­பு­ரிமம் பெற்­றனர்.

1793 : ஐக்­கிய இராச்­சியம் மற்றும் நெதர்­லாந்­துக்கு எதி­ராக பிரான்ஸ் போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1814 : பிலிப்­பைன்ஸில் மயோன் எரி­மலை வெடித்­ததில் 1,200 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1832 : ஆசி­யாவின் முத­லா­வது தபால் வண்டி சேவை (mail–coach) கொழும்பு கண்டி நக­ரங்­க­ளுக்கு இடையில் ஆரம்­ப­மா­கி­யது.

1880 : யாழ்ப்­பா­ணத்­திற்கும் பருத்­தித்­ துறைக்கும் இடை­யி­லான தபால் வண்டி சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1884 : ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்­கில அக­ரா­தியின் முதற் பதிப்பு வெளி­யா­னது.

1893 : தோமஸ் எடிசன் தனது முத­லா­வது அசையும் படத்­துக்­கான ஸ்டூடி­யோவை நியூ ஜேர்­சியில் கட்டி முடித்தார்.

1908 : போர்த்­துக்கல் மன்னன் முதலாம் கார்லொஸ் மற்றும் அவ­னது மகன், இள­வ­ரசர் லூயிஸ் பிலிப் லிஸ்பன் நகரில் கொல்­லப்­பட்­டனர்.

1913 : உலகின் மிகப்­பெ­ரிய ரயில் நிலையம் நியூயோர்க் நகரில் திறக்­கப்­பட்­டது.

1918 : ரஷ்யா ஜூலியன் நாட்­காட்டியில் இருந்து கிற­கோ­ரியன் நாட்­காட்­டிக்கு மாறி­யது.

1924 : சோவியத் ஒன்­றி­யத்தை ஐக்­கிய இராச்­சியம் அங்­கீ­க­ரித்­தது.

1946 : நோர்­வேயின் ட்றிகிவா லீ, ஐக்­கிய நாடுகள் சபையின் முத­லா­வது செய­லாளர் நாய­க­மாகத் தெரிவு செய்­யப்­பட்டார்.

1958 : எகிப்து மற்றும் சிரியா ஆகி­யன இணைந்து 1961 வரையில் ஐக்­கிய அரபுக் குடி­ய­ரசு என ஒரு நாடாக இயங்­கின.

1974 : பிரே­ஸிலில் 25 மாடிக் கட்­டடம் ஒன்றில் தீப்­பற்­றி­யதில் 189 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1979 : 15 ஆண்­டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயத்­துல்லா கொமெய்னி ஈரா­னுக்குத்  திரும்­பினார்.

2003 : நாசாவின் கொலம்­பி­யா­விண்­ணோடம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்து பூமிக்குத் திரும்­பி­ய­போது வெடித்துச் சித­றி­யதில் இந்­திய விண்­வெளி வீராங்­கனை கல்­பனா சாவ்லா உட்­பட ஏழு பேர் கொல்­லப்­பட்­டனர்.

2004 : சவூதி அரே­பி­யாவில் ஹஜ் யாத்­தி­ரை­யின்­போது சன நெரி­சலில் சிக்கி 251 பேர் உயி­ரிழந்­தனர்.

2005 : நேபாள மன்னர் ஞானேந்திரா நாடா­ளு­மன்­றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்தார்.

2005 : கனடா, ஓரினத் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடா னது.

2012 : எகிப்தில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது ரசிகர்களுக்கிடையிலான மோதல்களில் 72 பேர் உயரிழந்தனர்.

(Visited 25 times, 1 visits today)

Post Author: metro