இலங்கை வலை­பந்­தாட்டக் குழாத்தில் மீண்டும் தர்­ஜினி

(நெவில் அன்­தனி)

சிங்­கப்­பூரில் இவ் வருடம் நடை­பெ­ற­வுள்ள ஆசிய வலை­பந்­தாட்ட வல்­லவர் போட்­டிக்­கான இலங்கை அணியைத் தெரிவு செய்யும் பொருட்டு பெய­ரி­டப்­பட்­டுள்ள 30 வீராங்­க­னை­களைக் கொண்ட குழாத்தில் இலங்கை வலை­பந்­தாட்ட அணியின் முன்னாள் அணித் தலைவி தர்­ஜினி சிவ­லிங்­கமும் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார்.


37 வய­தான தர்­ஜினி சிவ­லிங்கம், 6 அடி, 10 அங்­குலம் (208 சென்­ரி­மீற்றர்) உய­ர­மா­னவர். ஆசி­யாவின் மிக உய­ர­மான வலைப்­பந்­தாட்ட வீராங்­க­னை­யாக அவர் விளங்­கு­கிறார். 2011 ஆம் ஆண்டு உலக கிண்ண வலைப்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் சிறந்த கோல் போடும் வீராங்­க­னை­யா­கவும் அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இலங்­கைக்கு மீண்டும் ஆசிய கிண்­ணத்தை வென்று கொடுப்­பதே தனது குறிக்கோள் என நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் தெரி­வித்த தர்­ஜி­னிக்கு நிகழ்ந்த அநீ­தியின் கார­ண­மாக அவர் ஓரங்­கட்­டப்­பட்­டி­ருந்தார்.

எனினும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் கடந்த வருடம் தொழில்சார் வலை­பந்­தாட்டப் போட்­டி­களில் விளை­யாடி அங்கு அதி சிறந்த கோல் போடும் வீராங்­க­னை­யாகத் தெரி­வா­னதை அடுத்து அவ­ரது திறமை மங்­க­வில்லை என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டது. மேலும் கடந்த வருட பிற்­ப­கு­தியில் நடை­பெற்ற வர்த்­தக வலை­பந்­தாட்டப் போட்­டி­க­ளிலும் சிறந்த கோல் போடும் வீராங்­கனை விருதை வென்­றி­ருந்தார்.

மேலும் இலங்கை வலை­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் புதிய நிரு­வா­கத்­தினர், புதிய பயிற்­றநர், தெரி­வா­ளர்கள் ஆகியோர் தர்­ஜினி மீது நம்­பிக்கைக் கொண்டு அவரை குழாத்தில் இணைத்­துக்­கொண்­டுள்­ளனர்.

திலகா ஜின­தாச புதிய பயிற்­று­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து முன்­னைய நிரு­வா­கத்­தி­னரால் புறக்­க­ணிக்­கப்­பட்ட பல சிரேஷ்ட வீராங்­க­னைகள் திறன்காண் நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்­தமை கவ­னத்­தில்­கொள்­ளப்­பட வேண்­டிய ஒன்­றாகும்.
இன்னும் சில வீராங்­க­னைகள் திறன்காண் நிகழ்ச்­சியைப் புறக்­க­ணித்தும் உள்­ளனர். அவர்­களை மீண்டும் தேர்­வுக்கு அழைப்­ப­தில்லை என புதிய பயிற்­றுநர் தீர்­மா­னித்­துள்ளார்.

முன்னாள் தேசிய வீராங்­க­னை­க­ளான அனு­பவம் வாய்ந்த மரிசா பெர்­னாண்டோ, திசாலா அல்­கம ஆகியோர் உடற்­த­குதி பரீட்­சைக்கு தோற்றி அதில் தேறும் பட்­சத்தில் குழாத்தில் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர்.

இலங்கை வலை­பந்­தாட்டக் குழாம்

கயனி திசா­நா­யக்க, கயாஞ்­சலி அம­ர­வன்ச, தர்­ஜினி சிவ­லிங்கம், திலினி வத்­தே­கெ­தர, லக்­மாலி பண்­டார, சுரேக்கா குமாரி கமகே, துலங்கா தனஞ்சி, துலாங்சி வன்­னி­தி­லக்க, ஓமேதா டில்ருக் ஷி, சேனாலி பாலிகா சஞ்சி, ஷாமலி ரத்­நா­யக்க, ஹசித்தா மெண்டிஸ், சச்­சினி ரொட்­றிகோ, மது­மாலி சின்­ஹ­பாகு, ஹேம­மாலி தம­யன்தி, எச். தேஷானி, தர்­ஷிகா அபே­விக்­ரம, கயன்தி கௌஷல்யா, சத்­து­ராங்கி ஜயசூரிய, ரெசூரி விஜேசுந்தர, எஸ்.பி.எல். சந்த்ரசிறி, துஷானி பண்டார, திவன்கா பெரேரா, ருக் ஷிகா ஹப்புஆராச்சி, ரூவினி யட்டிகம்மான, என். லக்மாலி, நௌஷாலி ராஜபக் ஷ, விதானி மதுஷனா, ரீ.எம். சுதுசின்ஹ.

(Visited 148 times, 1 visits today)

Post Author: metro