19 வய­துக்­குட்­பட்­டோ­ருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்: நான்­கா­வது சம்­பியன் பட்­டத்தை வெல்­வது யார்? இந்­தி­யாவா? அவுஸ்­தி­ரே­லி­யாவா?

(நெவில் அன்­தனி)

இந்­தி­யா­வுக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டி நியூ­ஸி­லாந்தின் டௌரங்கா ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நாளை நடை­பெ­ற­வுள்­ளது. தலா மூன்று தட­வைகள் 19 வய­துக்­குட்­பட்ட உலக சம்­பி­யன்­க­ளாக இந்த இரண்டு நாடு­களில் எந்த நாடு நான்­கா­வது தட­வை­யாக சம்­பி­ய­னாகப் போகின்­றது என்­ப­தற்கு நாளைய போட்டி விடை­ப­கர உள்­ளது.

இந்த இரண்டு நாடு­களும் இறுதிப் போட்­டியில் ஒன்றை ஒன்று எதிர்த்­தாடுவது இது இரண்­டா­வது தடவை­யாகும். ஆறு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்த இரண்டு நாடு­களும் டௌன்ஸ்வில் விளை­யாட்­ட­ரங்கில் சந்­தித்­த­போது வர­வேற்பு நாடான அவுஸ்­தி­ரே­லி­யாவை 6 விக்­கெட்­களால் வெற்­றி­கொண்டு இந்­தியா சம்­பி­ய­னா­கி­யி­ருந்­தது.

நியூ­ஸி­லாந்தில் இதற்கு முன்னர் 2002இலும் 2010இலும் நடை­பெற்ற இரண்டு உலகக் கிண்ணப் போட்­டி­க­ளிலும் அவுஸ்­தி­ரே­லியா சம்­பியன் பட்­டத்தை சூடி­யி­ருந்­தது. ஏனெனில், இம்­முறை உலகக் கிண்ணப் போட்­டி­களில் ஒரு குழுவில் இடம்­பெற்ற இந்த இரண்டு அணி­களும் ஒன்­றை­யொன்று லீக் சுற்றில் எதிர்த்­தா­டி­ய­போது அவுஸ்­தி­ரே­லி­யாவை நையப்­பு­டைத்த இந்­தியா 100 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

எனினும் இந்த நிகழ்­வு­க­ளை­யெல்லாம் வைத்து எந்த நாடு வெற்­றி­பெறும் என்று அறு­தி­யிட்டு கூற­மு­டி­யாது. தோல்வி அடை­யாத அணி­யாக சம்­பி­ய­னாக வேண்டும் என்ற கங்­க­ணத்­துடன் அவுஸ்­தி­ரே­லி­யாவை இந்­தியா எதிர்­கொள்­கின்­றது.

அதே­வேளை, லீக் போட்­டியில் இந்­தி­யா­விடம் அடைந்த தோல்­வியை நிவர்த்தி செய்யும் எண்­ணத்­துடன் அவுஸ்­தி­ரே­லியா இறுதிப் போட்­டியை எதிர்­கொள்­கின்­றது. எனவே பர­ப­ரப்பு, விறு­வி­றுப்­புடன் 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் நியூ­ஸி­லாந்தில் விடை­பெறும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

பொது­வாக 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி வர­லாற்றை எடுத்­துக்­கொண்டால் பந்­து­வீச்­சா­ளர்­களே ஆதிக்கம் செலுத்­தி­யுள்­ளதை அவ­தா­னிக்­கலாம்.

இந்­தியா மற்றும் அவுஸ்­தி­ரே­லி­யாவின் துடுப்­பாட்ட வரி­சைகள் பலம்­வாய்ந்­த­வை­யாக இருக்­கின்­ற­போ­திலும் கடந்த கால இறுதி ஆட்­டங்­க­ளி­லெல்லாம் மொத்த எண்­ணிக்கை சுமா­ரா­கவே இருந்­துள்­ளன.

20 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே இறுதிப் போட்­டியில் அதி­கூ­டிய மொத்த எண்­ணிக்­கைகள் பெறப்­பட்­டன. ஜொஹா­னெஸ்­பேர்கில் 1998இல் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் நியூ­ஸி­லாந்து 6 விக்­கெட்­களை இழந்து 241 ஓட்­டங்­களைப் பெற பதி­ல­ளித்து துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து 3 விக்­கெட்­களை இழந்து 242 ஓட்­டங்­களைப் பெற்று சம்­பி­ய­னா­கி­யி­ருந்­தது.

அணிகள் விபரம்

இந்­தியா: பிரித்திவ் ஷா (அணித் தலைவர்), ஷுப்மான் கில், ஆரியன் ஜூயல், அபிஷேக் ஷர்மா, அர்ஷ்தீப் சிங், ஹார்விக் தேசாய், மஞ்சோத் கல்ரா, கம்லேஷ் நாகர்­கோட்டி, பங்கஜ் யாதவ், ரியான் பராக், இஷான் பொரெல், ஹிமான்ஷு ரானா, அனுகுல் ரோய், ஷிவம் மாவி, ஷிவா சிங்.

அவுஸ்திரேலியா: ஜேசன் சங்கா (அணித் தலைவர்), வில் சதர்லண்ட், சேவியர் பார்ட்லெட், மெக்ஸ் ப்றையன்ட், ஜேக் எட்வேர்ட்ஸ், ஸக் இவேன்ஸ், ஜெரொட் ப்றீமன், ரெயான் ஹெட்லி, பாக்ஸ்டர் ஹோல்ட், நதன் மெக்ஸ்வீனி, ஜோநதன் மேர்லோ, லொய்ட் போப், ஜேசன் ரெல்ஸ்டன், பரம் உப்பால், ஒஸ்டின் வோ.

(Visited 42 times, 1 visits today)

Post Author: metro