சுதந்திர தினத்தையொட்டி கொழும்பில் நான்காம் திகதி மூடப்படும் வீதிகளும் மாற்று போக்குவரத்து வீதிகளும்

(ரெ.கிறிஷ்ணகாந்)

காலி முகத்­தி­டலில் நடை­பெ­ற­வுள்ள சுதந்­தி­ர­தின விழாவின்போது அன்­றைய தினம் மூடப்­ப­ட­வுள்ள வீதிகள் தொடர்பில், மாற்­று­வீ­திகள் தொடர்­பாக பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­த­லொன்றை விடுத்­துள்­ளது. அதற்­க­மைய, எதிர்­வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி­முதல் நண்­பகல் 12 மணி­வ­ரையில் காலி வீதி, காலி முகத்­திடல் சுற்­று­வட்டம் முதல் பழைய நாடா­ளு­மன்ற சுற்­று­வட்டம் வரை­யான வீதி மற்றும் சைத்­திய வீதி ஆகியன மூடப்­ப­ட­வுள்­ளன.

அதே­போன்று முற்­பகல் 7 மணி முதல் நண்­பகல் 12 மணி­வரை கொள்­ளுப்­பிட்டி சந்தி ஊடாக காலி முகத்­திடல் சுற்­று­வட்டம் திசை நோக்கி பிர­வே­சித்தல், கொள்­ளுப்­பிட்டி புனித மைக்கல் சுற்­று­வட்­டத்தின் ஊடாக காலி வீதிக்கும், ரொடுன்டா சுற்­று­வட்­டத்­தி­னூ­டாக காலி வீதிக்கு பிர­வே­சித்தல் ஆகி­ய­வற்­றுக்­கான வீதி­களில் மூடப்­படும் அதே­வேளை, அங்கு வசிப்­பி­டத்தை கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­படும்.

மேலும், இக்­காலப் பகு­தி­யினுள் செரமிக் சந்­தி­யி­லி­ருந்து (லோட்டஸ் வீதி) பழைய நாடா­ளு­மன்றம் வரை­யான வீதி, யோர்க் வீதி­யி­லி­ருந்து இலங்கை வங்கி மாவத்தை நோக்­கிய வீதி, சினோர் சந்­தி­யி­லி­ருந்து கோட்டை சீ.டி.ஓ சந்தி, மாகன் மார்கர் வீதி உத்­த­ரா­நந்த மாவத்தை சந்தி ஊடாக காலி முகத்­தி­டலை அடையும் வீதி என்­பன மூடப்­ப­ட­வுள்­ளன.

மேலும், முற்­பகல் 8 மணி­யி­லி­ருந்து நண்­பகல் 12 மணி­வரை காமினி சுற்­று­வட்­டத்­தி­லி­ருந்து டீ.ஆர். விஜே­வர்­தன மாவத்­தையை அடையும் வீதி, கொம்­ப­னித்­தெரு பொலிஸ் சுற்­று­வட்­டத்­தி­னூ­டாக ஈகல் சந்­தியை அடையும் வீதி என்­பன மூடப்­ப­ட­வுள்­ளன.

இதே­வேளை, காலி முகத்­திடல் வழி­யாக கொழும்­புக்குள் பிர­வே­சிக்கும் கன­ரக வாக­னங்கள் மாற்­று­வீ­தி­யாக டபிள்யூ.டி. சில்வா மாவத்­தை­யி­னூ­டாக பழைய ஹெவ்லொக் வீதி, மாயா சுற்­று­வட்டம், ஹெவ்லொக் வீதி, திம்­பி­ரி­கஸ்­யாய வீதி, பேஸ்லைன் வீதி­யூ­டாக கொழும்பை அடைய முடியும்.
அல்­லது ஹெவ்லொக் வீதி, மும்­மூ­லைச்­சந்தி, சொய்ஸா சுற்­று­வட்டம் (டீ.பி. ஜாயா மாவத்தை அல்­லது டீன்ஸ் வீதி­யூ­டாக) மரு­தானை பாலம், டெக்­னிக்கல் சந்­தி­யூ­டாக கொழும்பை அடை­ய­மு­டியும்.

காலி வீதி­யூ­டாக கொழும்­பி­லி­ருந்து வெளி­யேறும் கன­ரக வாக­னங்கள் மேற்­படி வீதி­யூ­டாகச் சென்று டபிள்யூ.டி. சில்வா வீதி­யூ­டாக காலி வீதியை அடை­ய­மு­டியும் அல்­லது மும்­மூலை சுற்­று­வட்­டத்­தி­னூ­டாக ஆர். ஏ. டி மெல் வீதி­யூ­டாக காலி வீதியை அடைய முடியும்.

இதே­வேளை, காலி வீதி­யி­னூ­டாக கொழும்­புக்குள் பிர­வே­சிக்கும் பஸ் மற்றும் இல­கு­ரக வாக­னங்கள் என காலி வீதி­யி­லி­ருந்து பக­தலே வீதி, ஆர்.ஏ.டி மெல் வீதி, பௌத்­தா­லோக்க வீதி, தும்­முல்லை சுற்­று­வட்டம், தர்ஸ்டன் வீதி, ஜே.ஓ.சி சந்தி, கிளாஸ் ஹவுஸ், நந்தா மோட்டர்ஸ், ஹோர்டன் சுற்­று­வட்டம், சொய்ஸா சுற்­று­வட்டம், டீன்ஸ் வீதி­யூ­டாக டெக்னில் சந்­தியை அடைய முடியும்.

மேலும், கொள்­ளுப்­பிட்டி சந்­தி­யி­லி­ருந்து வலது பக்­கத்தில் திரும்பும் வீதி­யூ­டாக மும்­மூலைச் சந்­தியை அடைந்து நக­ர­மண்­ட­பத்தை அடைந்து அல்­லது கொள்­ளு­ப்பிட்டி சந்­தி­யி­லி­ருந்து தர்­ம­பால மாவத்­தை­யி­னூ­டாக, நக­ர­மண்­ட­பத்தை அடைந்து மரு­தானை வழி­யாக கொழும்­புக்குள் பிர­வே­சிக்க முடியும். காலை 9 மணி­யி­லி­ருந்து கொள்­ளுப்­பிட்டி சந்­தியில் பித்­தளை சந்தி, கொம்­ப­னித்­தெ­ரு­வி­னூ­டாக பய­ணிக்க இட­ம­ளிக்­கப்­படும்.

இதே­வேளை, காலி மத்­திய வீதி ஊடாக கொழும்­பி­லி­ருந்து வெளி­யேறும் பஸ் மற்றும் இலகு ரக வாக­னங்கள் ஒல்­கொட்­ வீ­தி­யி­லி­ருந்து தொழில்­நு­ட்ப கல்­லூரி சந்தி வழி­யாக மரு­தானை பாலம், டீ.பி. ஜாயா மாவத்தை, இப்­பன்­வல சந்தி, யூனியன் பிளேஸ், லிப்டன் சுற்­று­வட்­டம்ஈ தர்­ம­பால வீதி, எவ். ஆர். சேனா­நா­யக்க வீதி, கன்­னங்­கர வீதி, நந்தா மோட்டர்ஸ் சந்தி, சுதந்­திர சதுக்­கச்­சந்தி, ரீட் வீதியை சென்­ற­டைந்து தும்­மூலைச் சுற்றுவட்டம், பௌத்தாலோக்க மாவத்தை, ஆர்.ஏ.டி. த. மெல் மாவத்தை ஊடாக காலி வீதியை அடையமுடியும்.

சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி மூடப்படும் வீதிகளுக்கு பதிலாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் சாரதிகளை கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

(Visited 34 times, 1 visits today)

Post Author: metro