படு­கொலை வழக்கில் சாட்­சி­யா­ள­ரான பொலிஸ் பரி­சோ­தகர் மர­ணித்­து­விட்­ட­தாக பொய்­யான அறிக்கை சமர்­ப்பித்த சார்ஜன்ட் கைது

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மேல் நீதி­மன்றில் விசா­ரணை செய்­யப்­பட்டு வரும் கொலை வழக்கு ஒன்றின் சாட்­சி­யா­ள­ரான பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக பொய்­யான அறிக்­கையை நீதி­மன்­றுக்கு சமர்ப்­பித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பொலிஸ் விசேட விசா­ரணைப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

ஆட்­டுப்­பட்டித் தெரு பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றும் பொலிஸ் சார்­ஜன்டே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் விக்­ர­ம­சிங்­கவின் பணிப்­பு­ரையில் அவர் கட­மை­யி­லி­ருந்தும் இடைநிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

2009 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கொலைச் சம்­பவம் ஒன்று தொடர்பில் குறித்த பொலிஸ் பரி­சோ­தகர் விசா­ரணை செய்­துள்ளார். பின்னர் அவர் பொலிஸ் சேவை­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றுள்ளார்.

 

இந்­நி­லையில் அப்­போது பேலி­ய­கொட பொலிஸ் நிலை­யத்தில் குற்­ற­வியல் பிரிவில் கட­மை­யாற்­றி­யுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், இந்த வழக்கில் ஆஜ­ரா­கி­யுள்­ள­துடன், வழக்கின் சாட்சிப் பட்­டி­யலில் 7 ஆவது சாட்­சி­யா­ள­ராக சேர்க்­கப்­பட்ட ஓய்வு­பெற்ற பொலிஸ் பரி­சோ­தகர் இறந்­து­விட்­ட­தாக பொய்­யாக இரு வேறு சந்­தர்ப்­பங்­களில் அறிக்கை கொடுத்­துள்ளார். 2009 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்­களில் அவர் மேற்­படி பொய்­யான அறிக்­கை­களை நீதி­மன்­றுக்கு கொடுத்­துள்ளார்.

எனினும், இந்த வழக்கில் சாட்­சி­ய­ம­ளிக்க ஓய்­வு­பெற்ற பொலிஸ் பரி­சோ­த­க­ருக்கு இரு வேறு சந்­தர்ப்­பங்­களில் விடுக்­கப்­பட்ட அறி­வித்­தலை அவ­ருக்கு கைய­ளிக்­காமல் குறித்த சார்ஜன்ட் நடந்து கொண்­டுள்ளார்.
இந்த நிலையில் ஒரு சந்­தர்ப்­பத்தில் மேற்­படி ஓய்­வு­பெற்ற பொலிஸ் பரி­சோ­தகர் குறித்த வழக்கில் ஆஜ­ரா­கிய நிலையில், அது தொடர்பில் கருத்தில் கொண்டு பொய் கூறிய சார்ஜன்ட் தொடர்பில் சட்ட மா அதி­பரால் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லை­யி­லேயே பொலிஸ் விஷேட விசா­ரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வாவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு குறித்த சார்ஜன்ட் ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

(Visited 36 times, 1 visits today)

Post Author: metro