சோமாலிய கடற் கொள்ளையர்களை கட்டுப்படுத்த சமுத்திர செயலகத்தை ஸ்தாபிக்க அரசு தீர்மானம்!

(எம்.மனோ­சித்ரா)

சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சமுத்­திர நட­வ­டிக்­கைகள் தொடர்­பான செய­ல­கத்தை இலங்­கையில் ஸ்தாபிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர­மா­னித்­துள்­ளது.

சோமா­லியா கடற்­ப­ரப்பில் கடற்­கொள்­ளை­யர்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக சர்­வ­தேச கேந்­தி­ர­மாக “The Contact Gror-tp on Piracy off the Coast of Somalia” எனும் அமைப்பு செயற்­பட்டு வரு­கின்­றது. இவ்­வ­மைப்பு 2009 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாகும்.

இவ்­வ­மைப்பில் இலங்கை ஆரம்­பத்­தி­லி­ருந்து அங்­கத்­துவம் வகித்து வரு­கின்­றது. இந்த நிலையில் அக்­கு­ழுவின் பணியை முறை­யாக நிறை­வேற்­று­வ­தற்­காக அதன் செய­ல­கத்தை இலங்­கையில் ஸ்தாபிப்­ப­தற்கே தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சோமா­லிய கடற்­ப­ரப்பில் கடற்­கொள்­ளை­யர்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சமுத்­திர நட­வ­டிக்­கைகள் தொடர்­பான செய­ல­கத்­தினை தாபிப்­ப­தற்­கான தகைமை இலங்கை கடற்­ப­டை­யி­ன­ருக்கு காணப்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

(Visited 21 times, 1 visits today)

Post Author: metro