பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா 2018: விஸா அனு­ம­தியை மீறு­ப­வர்­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லியா கடும் எச்­ச­ரிக்கை

பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்ற திட்­ட­மிட்­டுள்ள விளை­யாட்டு வீர, வீராங்­க­னைகள், விஸா அனு­மதி காலத்­துக்கும் மேல் தங்­கி­யி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அவுஸ்­தி­ரே­லிய அரசு கடும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா கோல்ட் கோஸ்டில் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் இதற்கு முன்னர் நடை­பெற்ற பிர­தான விளை­யாட்டுப் போட்­டி­க­ளின்­போது பெரு­ம­ள­வி­லான விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களும் விஸா அனு­ம­தி­களை மீறி­ய­த­னாலும் புக­லிடம் கோரி விண்­ணப்­பித்­த­தாலும் இந்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

‘‘எல்லைப் பாது­காப்பு விட­யத்தில் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரும் கடும் போக்கு மற்றும் அவுஸ்­தி­ரே­லிய சட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­ப­டா­த­வர்கள் ஆகிய விட­யங்­களில் விட்­டுக்­கொ­டுப்பு இடம்­பெ­றாது’’ என உள்­துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரி­வித்தார்.

‘‘பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா­வுக்கு வரு­கை­தரும் சக­லரும் அற்­பு­த­மான நேரங்­களை அனு­ப­விக்கும் வகையில் நகரம், மாநிலம் மற்றும் தேசம் சக­ல­வி­த­மான நல்­லேற்­பா­டு­க­ளையும் செய்­து­கொ­டுக்கும் என நான் நம்­பு­கின்றேன்’’ என உள்ளூர் ஊட­க­மொன்­றுக்கு அவர் கூறினார்.

‘‘எவ்­வா­றா­யினும் விஸா அனு­ம­தி­க­ளுக்கு விருந்­தா­ளிகள் கட்­டுப்­பட்டு நடப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. தவ­றி­ழைப்­ப­வர்­க­ளுக்கு அப­ராதம் விதிக்­கப்­படும்’’ என்றார் பீட்டர் டட்டன்.

சிட்னி 2000 ஒலிம்பிக் விளை­யாட்டு விழா, மெல்பர்ன் 2006 பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா ஆகி­ய­வற்றை அவுஸ்­தி­ரே­லியா முன்­னின்று நடத்­திய இரண்டு சந்­தர்ப்­பங்­க­ளிலும் விளை­யாட்டு வீர, வீராங்­க­னைகள் விஸா அனு­மதி காலம் கடந்த பின்­னரும் தங்­கி­யி­ருந்­ததால் பிரச்­சி­னைகள் உரு­வெ­டுத்­தி­ருந்­தன.

மெல்பர்ன் 2006 பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் கலந்­து­கொண்ட கெமரூன், கானா, நைஜீ­ரியா, சியரா லியொன், பங்­க­ளாதேஷ் ஆகிய நாடு­களைச் சேர்ந்த சுமார் 45 பேர் விஸா அனு­ம­தியை மீறி­ய­துடன் புக­லிடம் கோரி­ய­தாக குறிப்­பிட்ட உள்ளூர் ஊடகம் தெரி­வித்­தது.

சிட்னி 2000 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­றி­ய­வர்­களில் 145 பேர் விஸா அனு­ம­தியை மீறி தங்­கி­யி­ருந்­த­துடன் 35 பேர் புக­லிடம் கோரி­யி­ருந்­தனர்.நாட்­டிற்குள் அக­திகள் வரு­வதை தடுக்கும் வகையில் அவுஸ்­தி­ரே­லிய அரசு கடு­மை­யான குடி­வ­ரவு கொள்­கையைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் வடகீழ் திசையில் அமைந்துள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் 2018 பொதுநலவாய விளையாட்டு விழா ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீர, வீராங்கனைகளும் உதவியாளர்களும் பங்குபற்றவுள்ளனர்.

(Visited 22 times, 1 visits today)

Post Author: metro