பாடகர் புருனோ மார்ஸ்க்கு 6 கிரமி விருதுகள்

அமெ­ரிக்க பொப் பாடகர் புருனோ மார்ஸ்க்கு 6 கிரமி விரு­துகள்: ’24 கே மேஜிக்’ சிறந்த பாட­லாகத் தேர்வு அமெ­ரிக்­காவில் இசைத் துறையில் வழங்­கப்­படும் உய­ரிய கிரமி விரு­துகள் கடந்த ஞாயி­றன்று அறி­விக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டன.

இதில் அமெ­ரிக்க பொப் இசைப் பாடகர் புருனோ மார்ஸ் 6 கிரமி விரு­து­களைத் தட்டிச் சென்றார்.

அவர் இசை­ய­மைத்து, எழுதி, பாடிய ‘ 24 மேஜிக் ‘ எனும் பாடல் 2018 ஆம் ஆண்டின் சிறந்த பாட­லாகத் தேர்வு பெற்­றது.

அமெ­ரிக்க இசைத் துறையில் சிறந்து விளங்­கு­ப­வர்­க­ளுக்கு 1959 ஆம் ஆண்டு முதல் கிரமி விரு­துகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

60 ஆவது கிரமி விரு­துகள் வழங்கும் விழா அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நக­ரி­லுள்ள மேடிசன் அரங்கில் கடந்த ஞாயி­றன்று நடை­பெற்­றது.

இது­வரை அமெ­ரிக்­காவின் லொஸ்­ஏஞ்செல்ஸ் நகரில் மட்­டுமே நடந்து வந்த கிரமி விரு­துகள் வழங்கும் விழா இவ்­வ­ருடம் முதல் முறை­யாக நியூயோர்க் நகரில் நடத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

கிரமி விரு­துகள் வழங்கும் விழா­வுக்கு அமெ­ரிக்­காவின் புகழ்­பெற்ற பொப் இசை கலை­ஞர்கள், பாட­கர்கள், நடி­கர்கள் உள்­ளிட்ட பலர் வந்­தி­ருந்­தனர்.

அவர்­க­ளுக்கு சிவப்பு கம்­பள வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. கிரமி விரு­துகள் வழங்கும் நிகழ்ச்­சியை ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்­கினார்.

இவ்­வி­ழாவில், அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பொப் இசைப் பாடகர் புருனோ மார்ஸ்க்கு 6 கிரமி விரு­துகள் வழங்­கப்­பட்­டன.

இவர் 7 பிரி­வு­களில் விரு­துக்­காக பரிந்­து­ரைக்­கப்­பட்ட நிலையில், 6 விரு­து­களைப் பெற்றார்.

இவர் இசை­ய­மைத்து பாடிய ‘ 24 கே மேஜிக்’ எனும் ஆல்பம் பாடல் தேர்வு செய்­யப்­பட்­டது. 32 வய­தான மார்க்­ஸுக்கு சிறந்த பாடகர், சிறந்த பாட­லா­சி­ரியர், சிறந்த தொழில்­நுட்பக் கலைஞர் உள்­ளிட்ட விரு­துகள் வழங்­கப்­பட்­டன.

பாடகர் கென்ட்ரிக் லாமர் 5 கிரமி விரு­து­களைப் பெற்றார். சிறந்த ரெப் ஆல்­ப­மாக கென்ட்­ரிக்கின் ‘டாமன்’ அல்­பமும், சிறந்த ரெப் பாட­லாக ‘ஹம்பில்’ பாடலும், சிறந்த ரெப் பாட­க­ராக ‘ஹம்பில்’ அல்­பத்தில் நடித்த கென்ட்ரிக் லாமரும் தேர்­வா­கினர். மேலும், சிறந்த இசை வீடி­யோக்­கான விருதும், ஹம்பில் அல்­பத்­துக்­காக கென்ட்ரிக் பெற்றார்.

இது மட்­டு­மல்­லாமல், எட் ஷீரன் இரு கிரமி விரு­து­களைப் பெற்றார். இவரின் சிறந்த பொப் அல்­ப­மாக ‘ டிவைட்’ அல்­பமும், தனிப்­பா­ட­க­ராக, ‘ஷேப் ஒப் வியு’ ஆல்­பத்தில் பாடி­ய­தற்­காக எட் ஷீர­னுக்கும் வழங்­கப்­பட்­டது.

சிறந்த புது­முக கலை­ஞ­ருக்­கான கிரமி விருது அலி­சியா காரா­வுக்கு வழங்­கப்­பட்­டது.

இந்த நிகழ்ச்­சியின் இடையே பொப் பாட­கர்கள் லேடி காகா, சாம் ஸ்மித், பிங்க், லூயிஸ் பான்சிஸ் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. மேலும், எரிக் சர்ச், மாரின் மோரிஸ், பிரதர்ஸ் ஆஸ்போர்ன் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் நடைபெற் றன.

(Visited 44 times, 1 visits today)

Post Author: metro