2,363 இடங்­களில் மண்­ச­ரிவு அபாயம்

(இரா­ஜ­துரை ஹஷான்)

நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­களில் மண்­ச­ரிவு அபா­ய­முள்ள 2,363 இடங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தேசிய கட்­டட ஆராய்ச்சி நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் விடுக்­கப்­பட்ட அறிக்­கையில், மண்­ச­ரிவு அபா­ய­முள்ள இடங்கள் அதி­க­மாக இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் காணப்­ப­டு­வ­துடன், அதன் எண்­ணிக்கை 393ஆக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

மாத்­தறை மற்றும் ஹம்­பாந்­தோட்டை மாவட்­டங்­களில் 569 இடங்­களும்,காலி மாவட்­டத்தில் 310,கேகாலை மாவட்­டத்தில் 128,கொழும்பு தொடக்கம் கம்­பஹா வரை­யான பகு­தி­களில் 44 இடங்­களும் அபாய வல­யத்தில் காணப்­ப­டு­வ­தாக கள ஆய்வின் தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன.

இதன்­படி அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள இடங்­களில் 6775 குடி­யி­ருப்­புக்கள் காணப்­ப­டு­வ­துடன் மக்­களை குடி­யி­ருப்­புக்­க­ளி­லி­ருந்து மீள்­கு­டி­ய­மர்த்தும் வேலைத்­திட்­டங்கள் தற்­போது மேற்­கொண்டு வரு­வ­துடன், இதற்­கான ஆரம்ப கட்ட நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்­காக 295 மீள்குடியமர்த்தல் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

Post Author: metro