பிறிதொரு நபருடன் உறவில் ஈடுபட்ட காதலியை அடித்து கொன்று சடலத்தை பெற்றோல் ஊற்றி எரித்த காதலன் கைது!

பிறிதொரு நபருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட காதலியை அடித்து கொலை செய்துள்ளதுடன், சடலத்தை பெற்றோல் ஊற்றி எரித்த காதலனை தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, கோயம்புத்தூர் மாவட்ட சின்னியம்பாளையப் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவருடைய 45 வயதான மனைவி அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சத்தியமூர்த்தியின் மனைவி கடந்த மாதம் 30ஆம் திகதி வீட்டின் அருகேயுள்ள குப்பைமேட்டில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இந்த கொலை தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்துள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாக தளவாய்பேட்டையைச் சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 40) பொலிஸில் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் குறித்த பெண்ணை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணையில் அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:- எனக்கும், எனது மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவள் என்னிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டாள்.

நான் பழைய இரும்புகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தேன். அப்போது மறைந்த சத்தியமூர்த்தியின் மனைவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

அப்போது சத்தியமூர்த்தியின் மனைவி என்னிடம் அடிக்கடி பணம் கேட்பாள். நானும் பணம் கொடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் பணம் அதிகமாக கேட்டாள். அதற்கு நான் மறுத்து வந்தேன். இதனால் அவள் என்னை தொந்தரவு செய்து வந்தாள்.
மேலும் அவள் என்னிடம் பாலியல் உறவில் ஈடுபடவும் மறுத்து வந்தாள். அதுமட்டுமன்றி வேறு நபருடன் கள்ளத்தொடர்பு அவள் வைத்திருந்ததும் அவருடன் உறவில் ஈடுபட்டு வந்ததும் எனக்கு தெரியவந்தது.

சம்பவத்தன்று நான் இரும்புகளை விற்பனை செய்வதற்காக சின்னியம்பாளைய பகுதிக்குச் சென்றேன். அப்போது எனது காதலியை அவள் வீட்டில் சந்தித்து உல்லாசம் அனுபவிக்கும் நோக்குடன் சென்றேன். அவரின் பெற்றோர் குறித்து அயலவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் வேலையின் நிமித்தம் வெளியூர் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காதலியன் வீட்டு கதவு மூடப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே யாரோ இருக்கும் சத்தம் கேட்டது. கதவை சற்று தள்ளிப் பார்த்தபோது அவள் பிறிதொரு நபருடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை நேரில் பார்த்து விட்டேன். இது எனக்குள் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

சம்பவத்தன்று அவளுடைய வீட்டுக்கு நான் வழக்கம்போல் சென்றேன். அவளை நான் பாலியல் உறவுக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் அவள் வரவில்லை. இதனால் எனக்கும் அவளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. காதலியும் கோபித்தபடி வீட்டை விட்டு வெளியே சென்றாள்.

உடனே நான் வெளியே ஓடிச்சென்று நான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவளை பிடித்து அவளின் மார்பு, வயிற்று பகுதியில் என மாறி மாறி குத்தினேன். இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிதுந்து விட்டாள். வீட்டு வாசலில் இரத்தக்கறை படிந்திருந்தது. அதை மறைக்க மண்ணை போட்டு மூடினேன்.

சடலத்தை வீடு அருகே உள்ள குப்பைமேட்டுக்கு இழுத்துச் சென்றேன். அங்கு கிடந்த மரப்பலகை, வைக்கோல், தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்து அவற்றின் மீது சடலத்தில் போட்டு எரித்தேன் என அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குற்றவாளியான தமிழ்செல்வனை கோயம்புத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார் அவரை சிறையில் அடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

(Visited 70 times, 1 visits today)

Post Author: metro