தமி­ழ­ரசுக் கட்­சிக்கும் தலை­மைக்கும் எதி­ராக சிலர் செயற்­பட்­டாலும் மக்கள் எமது பக்கம் உள்­ளனர் – மாவை சேனாதிராஜா

(வி.சுகிர்­த­குமார்)

நடை­பெ­று­கின்ற இந்தத் தேர்தல் முறை­யிலே வேட்­பா­ளர்கள் அனை­வரும் பெண்­க­ளாக இருக்க முடியும். ஆனால் அனை­வரும் ஆண்­க­ளாக இருக்க முடி­யாது. இதுதான் இத்­தேர்தல் முறையின் சிறப்பும், பெண்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் அந்­தஸ்தும் என தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

திருக்­கோவில் பிர­தே­சத்தில் நடை­பெற்ற தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இக்­க­ருத்தை முன்­வைத்தார். ஆண்கள் எப்­போதும் பெண்­களை தேர்­தலில் தெரிவு செய்ய மேற்­கொள்ளும் முயற்சி போது­மா­ன­தல்ல.

அப்­படி ஒரு சில பெண்கள் தேர்­தலில் போட்­டி­யிட வந்­தாலும் வெற்றி பெறு­வது அரிது. இம்­முறை பெண்­களை அனை­வரும் வெற்­றி­ய­டைச்­செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்­ப­தாக கூறினார்.

அதே­வேளை திருக்­கோவில் பிர­தே­சத்தில் 25 வீதத்­துக்கும் மேற்­பட்ட பெண்கள் இம்­முறை வெற்றி பெறு­வார்கள் என நம்­பு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.  சாதா­ரண தேர்­த­லாக கணிப்­பி­டப்­பட்ட இத்­தேர்தல் இம்­முறை அதிக முக்­கி­யத்­துவம் வாய்ந்த தேர்­த­லாக மாறி­யுள்­ளது. தென்­னி­லங்­கையில் அதி­கா­ரப்­போட்டி கார­ண­மாக அரசை இத்­தேர்தல் மூலம் கவிழ்க்க வேண்டும் எனவும் பலர் முயற்­சிக்­கின்­றனர்.

குறிப்­பாக ராஜ­ப­க் ஷ­வினர் தங்­க­ளுக்கு எதி­ராக இருக்­கின்ற ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களை மறைப்­ப­தற்கும், இரா­ணுவ முறையில் நடத்­தப்­பட்ட குடும்ப ஆட்சி முறை மோச­டி­களில் இருந்து தப்­பித்­துக்­கொள்­வ­தற்கும் இருக்கும் ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­காக போட்­டி­யி­டு­கின்­றனர். அதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பலத்தை நிரூ­பிக்க வேண்டும் என்று களத்­தில்­ இ­றங்­கி­யுள்ளார்.

இதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தோற்­க­டிக்­க­வேண்டும் என சிலர் நினைக்­கின்­றனர். குறிப்­பாக தமி­ழ­ர­சுக்­கட்­சியை அதன் தலை­மைத்­து­வத்தை உடைப்­ப­தற்கு முயற்­சிக்­கின்­றனர். நமது மக்கள் உள்­ள­வரை அதைப்­பற்றி நாங்கள் கவலை அடையவில்லை என்றார்.

(Visited 13 times, 1 visits today)

Post Author: metro