மூன்­றாண்­டு­களில் அர­சாங்­கத்­தினால் மலை­ய­கத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்­தி­கள்தான் என்ன? – மத்­திய மாகாண கல்­வி­ய­மைச்சர் ராமேஸ்­வரன் கேள்வி

(டி.சந்ரு)

தோட்டப் பிர­தே­சங்­களின் அனைத்து அபி­வி­ருத்­தி­களும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மூலமே செய்­யப்­பட்­டன, ஆனால் கடந்த 3 ஆண்­டு­க­ளாக உங்கள் பிர­தே­சத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தி­கள்தான் என்ன? ஐ.தே.க அர­சாங்­கத்­தினால் அப்­பாவி தொழி­லா­ளர்­களின் ஊழியர் சேம­லாப நிதியே கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது என மத்­திய மாகாண கல்­வி­ய­மைச்சர் ராமேஸ்­வரன் கூறினார்.

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் தொடர்­பான இ.தொ.காவின் கூட்டம் கொத்­மலை புரட்டொப் வட்­டா­ரத்தில் மத்­திய மாகாண கல்வி அமைச்சர் ராமேஸ்­வரன் தலை­மையில் நடை­பெற்­றது.

இதன் போது இவ்­வாறு தெரி­வித்தார். தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த அவர், 1000 ரூபா சம்­ப­ள உயர்வு பெற்றுத் தரு­வ­தாக ஹட்­டனில் வைத்து பிர­தமர் கூறினார் . ஆனால் இன்னும் அவரால் அதனைப் பெற்றுத் தர முடி­ய­வில்லை. இந்த நிலையில் இ.தொ.கா வினர் தான் கூட்டு ஒப்­பந்தம் செய்­தனர் என்று மக்­களை ஏமாற்­றிப் பிர­சா­ரங்­களை மேற்­கொள்­கின்­றனர்.

ஆறு­முகன் தொண்­டமான் அமைச்­ச­ராக இருக்கும் போது எமது தோட்ட மக்­க­ளுக்கு எவ்­வா­றான அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்­பது அனை­வரும் அறிந்­ததே ஆனால் இன்­றுள்ள அமைச்­சர்கள் கட்சி பார்த்தே அபி­வி­ருத்­தி­களை செயற்­ப­டுத்­து­கின்­றனர்.

தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்கு செல்லும் சில அமைச்­சர்கள் போலி­யான பிர­­சா­ரங்­களைச் செய்­வதன் மூலம் மக்­களை திசை திருப்­பு­கின்­றனர். அது மட்­டு­மல்­லாது எங்­க­ளுக்கு வாக்­க­ளித்தால் தான் உங்­க­ளுக்கு வீடு தருவோம் என்று மக்­களை ஏமாற்­று­கின்­றனர்.
ஆனால் இனி­வரும் காலங்­களில் எமது மக்கள் அவ்­வாறு ஏமா­றப்­போ­வ­தில்லை.

எனவே இதனை மாற்­றி­ய­மைக்க வேண்­டு­மானால் வெற்­றிலை சின்­னத்­துக்கு வாக்­க­ளித்து இ. தொ. கா. வை பலப்­ப­டுத்த வேண்­டு­மென்று தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

Post Author: metro